மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கக் கோரிய வழக்கு - தமிழக டிஜிபி, மகாராஷ்டிர காவல்துறைக்கு நோட்டீஸ்
பதிவு : மே 13, 2020, 08:33 AM
மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்க கோரிய மனுவுக்கு, தமிழக டிஜிபி மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்க கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தலா 3,500 ரூபாய் செலுத்த வேண்டுமென அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மஹாராஷ்டிராவில் இருக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனை பதிவுசெய்த நீதிபதிகள் மலேசியாவில் சிக்கியிருப்பவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும்போது மஹாராஷ்டிராவில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது? என கேள்வி எழுப்பி மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக டிஜிபி, மஹாராஷ்டிரா காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

பிற செய்திகள்

"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.

33 views

"வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

835 views

வெட்டுக்கிளி படையெடுப்பு - விமான துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

வெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என விமானத்துறை அமைச்சகம் கேட்டுககொண்டுள்ளது.

272 views

"முன்கள பணியாளர்களுக்கு இசையால் பெருமை" - வெங்கையா நாயுடு பாராட்டு

இளையராஜாவின் பாரத பூமி பாடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

10 views

ராணுவம் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை : சண்டை நீடிப்பதால் தொடர் பதற்றம்

காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

465 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.