"ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை" - ரயில்வே வாரியத் தலைவர்
பதிவு : ஏப்ரல் 10, 2020, 03:45 PM
மத்திய அரசு உத்தரவிடும் நிலையில், ரயில்களை இயக்குவது குறித்து உயரதிகாரிகளுடன் ரயில்வே வாரியத் தலைவர் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா தொற்று உள்ள பகுதிகளை 3 ஆக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சிவப்பு, மஞ்சள், பச்சை என பிரிக்கப்பட உள்ளதாகவும், இதில் சிவப்பு பகுதியில் உள்ள இடங்களுக்கு போக்குவரத்து தடையை தொடர்ந்து நீட்டிக்கவும், மஞ்சள் நிற வரம்பிற்குள் வரும் பகுதிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்தை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு உத்தரவிடும் நிலையில், ரயில்களை இயக்குவது குறித்த ரயில்வே வாரியத் தலைவர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரயில்களை இயக்க அரசு உத்தரவிடும் நிலையில், சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் எனவும், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்குவது இல்லை என்றும், இந்த சிறப்பு ரயில்களில் முககவசம் கட்டாயம் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. சமூக இடைவெளி, தெர்மல் சோதனை மற்றும் உணவு விநியோகம் ரத்து ஆகியவை  குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று நடுஇருக்கையை காலியாக விடுவது எனவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், மத்திய அரசு உத்தரவுப்படியே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என ரயில்வே வாரிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

654 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

186 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

140 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

51 views

பிற செய்திகள்

எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிப்பால் பரபரப்பு...

இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.

16 views

போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் - ஒடிஷாவில் பரபரப்பு

ஒடிஷாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

196 views

"கொரோனா ஊரடங்கு அதன் இலக்கில் தோல்வியை சந்தித்து வருகிறது" - ராகுல்காந்தி

உலகிலேயே கொரோனா தொற்று தற்போது வேகமாக அதிகரித்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

8 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

16 views

இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடு

இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.

9 views

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கோரிக்கை ஏற்பு - 13 மாவட்டங்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்பி வைப்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழுமலையானை தரிசிக்க முடியாமல் தவிக்கும் தங்களுக்கு, லட்டு பிரசாதம் கிடைக்க ஆவன செய்யுங்கள் என ஏராளமான பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு ஈ மெயில், வாட்ஸ்அப் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.