கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம் பார்ப்பது ஏன்?
பதிவு : ஏப்ரல் 10, 2020, 03:29 PM
கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம் பார்த்து வருகிறது. அங்கு நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* முதன் முதலாக  கடந்த ஜனவரி 20-ம் தேதி கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவியது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்நாட்டின் 50 மாகாணங்களிலும் தனது ஆதிக்கத்தை இந்த கொடிய வைரஸ் நிலைநாட்டி உள்ளது.

* சர்வதேச அளவில் அமெரிக்காவில் மட்டும் 4 லட்சத்து 68 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

* அங்குள்ள மாகாணங்களில், நியூயார்க்கில் இந்த வைரஸ் கோரதாண்டவமாடி வருகிறது. அங்கு கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளை விட நியூயார்க் மாகாணத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது.

* நியூயார்க் நகரில் மட்டுமே 81 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. நியூயார்க்கில் மட்டும் இதுவரை பலியானவர்களின்  எண்ணிக்கை 6 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது.

* இதேபோல் நியூஜெர்சி மாகாணத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

* மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, மசாசூசெட்ஸ், பென்சில்வேனியா, புளோரிடா, இல்லினாய்ஸ், ஜார்ஜியா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

* தலைநகர் வாஷிங்டனில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டிப்பிடிக்கும் நிலை உள்ளது.

* கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநாட்டு அரங்குகள், தேவாலயங்கள்  தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது

* அங்கு பலியானவர்களின் உடல்களை வைப்பதற்கு பிணவறைகளில் இடமின்றி, லாரிகளில் போட்டு, பின்னர் இறுதிச்சடங்குக்கு கொண்டு செல்கிற நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

654 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

184 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

140 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

50 views

பிற செய்திகள்

எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிப்பால் பரபரப்பு...

இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.

14 views

கொரோனா : "2-வது ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்" - உலக சுகாதாரத்துறை நிறுவனம் எச்சரிக்கை

கொரோனாவின் இரண்டாம் கட்ட ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

334 views

உயிர்தியாகம் செய்தவர்களுக்கான நினைவு நாள் நிகழ்வுகளை தொடங்கி வைத்த டிரம்ப் - உயிர்நீத்த வீரர், வீராங்கனைகளுக்கு அஞ்சலி

அமெரிக்க முப்படைகளில் பணியாற்றி, நாட்டிற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்காக ஆண்டு தோறும் மே 25 ஆம் தேதியை அமெரிக்கர்கள் நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர்.

4 views

இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடு

இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.

9 views

கொரோனா பாதிப்புக்கு தரப்படும் மலேரியா மருந்து - ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தற்காலிக நிறுத்தம்" - உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவிப்பு

கொரோனா பாதிப்புக்கு தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவித்துள்ளது.

10 views

நிலநடுக்கத்திலும் அசராமல் நின்ற நியூசிலாந்து பெண் பிரதமர்

நியூசிலாந்து நாட்டின் வெல்லிங்டன் நகரில், நிலநடுக்கத்திலும், அசராமல் நின்று தனது செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து, அசத்தியுள்ளார் நியூசிலாந்தின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்...

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.