மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு : ஏப்ரல் 04, 2020, 06:18 PM
ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 

 
நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 


கொரோனா தொற்று நோய்க்கு மத சாயம் பூசுவதை தவிர்த்து, பாதிக்கப்படுவோரையும் அவரின் குடும்பத்தையும் வெறுப்புணர்வோடு பார்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் 


கொரோனா தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் அதற்கு உரிய அனுமதி வழங்கப்படுவதாகவும், 


தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க அரசு தரப்போடு இணைந்து சமூக ஆர்வலர்களும் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் பொருட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை குறைத்து காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே பொருட்களை வாங்க முடியும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 


இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

375 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

156 views

பிற செய்திகள்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

41 views

ஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

147 views

பாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்

பாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

27 views

சென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா

சென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

21 views

தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

73 views

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு வரும் ஜூன் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.