மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பேருந்து - அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு அனுமதி
பதிவு : மார்ச் 26, 2020, 12:42 PM
மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு இரண்டு அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டன. அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் 11 எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், பணி காரணமாக நாகப்பட்டினத்தில் பணியாற்றுபவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நாகப்பட்டினத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், மற்றும் தொண்டு நிறுவனத்தினர், மருத்துவ பணிகளுக்காக செல்லுபவர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மயிலாடுதுறையில் இருந்து இரண்டு பேருந்துகளை இயக்கியது. காலை 8மணிக்கு மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்தில், அலுவலக பணிகளுக்காக செல்பவர்கள் அடையாள அட்டையை காண்பித்துவிட்டு பயணம் செய்தனர். காவல்துறை சோதனைக்குப்பிறகு இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் அனைவரும் முகக்கவசம் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் நாகப்பட்டினத்திலிருந்து 5மணிக்கு இந்த பேருந்து புறப்பட்டு மயிலாடுதுறைக்கு திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

உண்டியலில் சேர்த்து வைத்த பணம் : கொரோனா நிதிக்காக வழங்கிய மாணவர்கள்

கும்பகோணத்தில் முதலாம் வகுப்பு மாணவி மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவன் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொரோணா நிதிக்காக வழங்கி உள்ளனர்.

10 views

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில், பரிசோதனை மேற்கொள்ள கூடிய, கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

5 views

"திருவேற்காடு அம்மா உணவகத்தில் முட்டை, வாழைப்பழம்" - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

ஆதரவற்றோருக்கு, அம்மா உணவகத்தில் சத்தான உணவு கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

6 views

தமிழகத்தில் 14 துணை உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

தமிழகத்தில் 14 துணை, உதவியாளர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

9 views

"தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

52 views

மதுரை : "சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடிய கூட்டம்"

மதுரை செக்கானூரணி ரேசன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாய் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.