அம்மா காய்கறி கடையில் அலைமோதும் கூட்டம் - டோக்கன் முறையில் ஐந்து ஐந்து பேராக அனுமதி
பதிவு : மார்ச் 26, 2020, 03:08 AM
தூத்துக்குடி, அம்மா காய்கறி கடையில், டோக்கன் முறையில் காய்கறி விற்பனை செய்யப்பட்டது.
தூத்துக்குடி, அம்மா காய்கறி கடையில், டோக்கன் முறையில் காய்கறி விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறி உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில்,  தூத்துக்குடி மாவட்டத்தில், அம்மா காய்கறி சந்தையில் குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்கப்படுகின்றன. இதையடுத்து மக்கள் கூட்டமாக வருகை தந்ததால், டோக்கன் வழங்கப்பட்டு ஐந்து, ஐந்து பேராக கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி கொடுத்து கை கழுவிய பிறகே கடைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

330 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

85 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

தனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்

தனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

18 views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

108 views

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

307 views

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு - காவல்துறையினர் நூதன பிரசாரம்

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

75 views

வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர்.

26 views

ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் பொதுமக்கள் நன்றி தெரிவித்த சுகாதாரப் பணியாளர்கள்

ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு தந்த கடலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் இணைந்து கைதட்டினர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.