"தமிழகத்தில் 2 தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகள்" - தமிழக அரசு அறிவிப்பு
பதிவு : மார்ச் 26, 2020, 02:40 AM
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் தயார் படுத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சீனா, இத்தாலி போன்ற நாடுகளைப் போலவே, 4 தனிமைப்படுத்தும் மருத்துவமனைகள் அமைக்க 
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தாம்பரம் சானிட்டோரியம் மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, தஞ்சை செங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என 4 மருத்துவமனைகள் தனிமைப்படுத்தும் மருத்துவமனைகளாக மாற்றப்பட உள்ளது.   இதில் தாம்பரம் சானிட்டோரியம் மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாகவும், மீதமுள்ள 2 மருத்துவமனைகள் விரைவில் தனிமைப்படுத்தும் மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இது தவிர கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் ஆய்வகத்தை லெவல் 3 ஆக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா - நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

238 views

பிற செய்திகள்

தூய்மை காவலர்களுக்கு பாத பூஜை : பரிசுப் பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவி

அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களை கவுரவிக்கும் வகையில் மன்ற தலைவி சந்திரா பாதபூஜை செய்தார்.

19 views

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி வழி மனநல ஆலோசனை

சென்னை மாநகரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

97 views

கட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு தண்டனை வழங்கிய போலீசார்

சென்னை குன்றத்தூரில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே திரிந்த வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் தண்டனை விதித்தனர்.

18 views

நாள்தோறும் 5000 பேரின் பசியை போக்கும் அம்மா உணவகம்...

ஒசூர் நகரில் பேருந்துநிலையம் உள்பட இரண்டு இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகம் நாள்தோறும் 5 ஆயிரம் பேரின் பசியை போக்கி வருகிறது.

185 views

144 தடை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 475 வழக்குகள் 727 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி ஊர்சுற்றி திரிவதாக கூறி 727 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 views

பரபரப்பாக 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை -தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகள்

கொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில் சென்னையில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான் அத்தனை பணிகளும் முடுக்கி விடப்படுகிது.

383 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.