கொரோனாவுக்கு எதிரான போர் : 21 நாட்களில் வெல்வதே இலக்கு - பிரதமர் நரேந்திர மோடி தகவல்
பதிவு : மார்ச் 26, 2020, 02:31 AM
கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் அதனை வெல்வதே நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தனது சொந்த தொகுதியான வாரணாசி மக்களிடம் காணொலி காட்சி மூலம் பிரதமர்  மோடி உரையாற்றினார். அப்போது, நவராத்திரி முதல் நாளில் அனைவரும் பிரார்த்தனை செய்வதில் பிசியாக இருக்க வேண்டிய நேரத்தில், இந்த தொடர்புக்கு நேரம் ஒதுக்கியதற்காக நன்றி தெரிவித்தார். வாரணாசி தொகுதியின் எம்.பி. என்ற முறையில், இதுபோன்ற தருணத்தில் உங்களிடையே இருந்திருக்க வேண்டும் என தெரிவித்த பிரதமர் மோடி, தனது சகாக்களின் மூலமாக வாரணாசி பற்றி அறிவதாக கூறினார். பணக்காரர், ஏழை, தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி செய்வோர் எல்லாம் கொரோனாவுக்கு தெரியாது என்றும், அது யாரையும் விடாது எனவும் கூறிய அவர், கொரோனா பற்றிய சரியான தகவல்களை பெற 90131 51515 என்ற எண்ணைப் பயன்படுத்தலாம் என தெரிவித்தார். மகாபாரத போரில் 18 நாளில் வெற்றி அடைந்ததை சுட்டிக்காட்டிய  மோடி, கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் 21 நாட்களில் வெல்வதே எங்கள் நோக்கம் எனவும் உறுதியாக கூறினார். 

கொரோனா தொற்று : ஜி 20 நாடுகளின் மாநாட்டில் ஆக்கப்பூர்வமான விவாதம் - மோடி நம்பிக்கை


கொரோனா தொற்றில் இருந்து உலகம் விடுபட ஜி.20 நாடுகள் முக்கிய பங்காற்ற முடியும் என்றும், சவூதி மன்னர் சல்மான் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், இது தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என தான் நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

666 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

319 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

106 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

74 views

பிற செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் மரணம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்

கேரளாவின் பிரபல இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் திங்கள்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.

11 views

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் : நகைச்சுவையான வீடியோக்களை டிக் டாக்கில் பதிவேற்றி மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக நடித்துக்காட்டி விதவிதமான டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

26 views

எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு

குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்கள், மற்றும் எம்பிக்கள் ஊதியம் 30 சதவீதம குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

20 views

"சுதந்திரத்துக்கு பின் மோசமான பொருளாதார நெருக்கடி நிலை" - பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன்

கொரோனா ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்புகள் குறித்து தமது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜன், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

21 views

கைகளில் விளக்குடன் கூட்டமாக கிளம்பிய மக்கள்..

இந்தியாவின் பல்வேறு இடங்களில் நேற்று நடைபெற்ற ஒளியேற்றும் நிகழ்வின் போது, ஒரு சிலர் கூட்டம் கூட்டமாக, விளக்குகளை ஏந்தி சென்றனர். அந்த காட்சிகளை பார்ப்போம்.

8 views

பாஜக - 40 வது ஆண்டு துவக்க விழா : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கட்சியை கட்டமைக்க பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து மறைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.