கொரோனா - தமிழகத்தில் முதல் உயிரிழப்பு
பதிவு : மார்ச் 25, 2020, 06:15 AM
மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் பகுதியை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இறந்து போனவருக்கு நீண்ட நாட்களாக சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். உயிரிந்த நபருடனான தொடர்புகள் குறித்தும், அவர் சென்று வந்த இடங்கள் குறித்தும்  அவரது  குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கட்டிட ஒப்பந்ததாரரான அவர், பள்ளி வாசல்களில் மதசொற்பொழிவு ஆற்றுபவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  வெளிநாட்டில் இருந்த வந்த தனது நண்பர்களை அவர் சந்தித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நுரையீரல் பிரச்சனைக்காக அந்த நபர்  தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து  சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.  இதனிடையே விருதுநகர், சிவகங்கை, கம்பம், மதுரை பெத்தானியாபுரம், முடக்குசாலை ஆகிய பகுதிகள் என 11 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

46 views

பிற செய்திகள்

மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்றவரா நீங்கள்? - கவனமுடன் இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு மார்ச் 10 முதல் மார்ச் 17க்கு இடைப்பட்ட நாட்களில் சென்றவர்கள் கவனமாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

27 views

தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் : கிருமி நாசினிகளை வழங்கினார் ஆர்.எஸ்.பாரதி

கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் அணிவது மற்றும் கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

16 views

கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை

வறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ 10,000 கடனாகவும் 5 ஆயிரம் மானியமாகவும் உடனடியாக வழங்க வேண்டும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

12 views

அரசு மருத்துவமனையில் எம்.பி.திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

8 views

ஆன்லைன் மூலம் வகுப்புகள் - சென்னை பல்கலை. துணை வேந்தர் உத்தரவு

ஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

43 views

மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் தினசரி சந்தையை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.