"நாஞ்சில் சம்பத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை துன்புறுத்த கூடாது" - புதுச்சேரி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : மார்ச் 25, 2020, 06:00 AM
நாஞ்சில் சம்பத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை துன்புறுத்த கூடாது என, புதுச்சேரி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாஞ்சில் சம்பத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை துன்புறுத்த கூடாது என, புதுச்சேரி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் பிரச்சாரத்தின் போது,  அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரன்பேடி குறித்து அவதூறாக பேசியதாக,  நாஞ்சில் சம்பத் மீது, தவளக்குப்பம் காவல்நிலையத்தில்  கடந்தாண்டு மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம், மணக்காவிளையில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டிற்கு கடந்த19 ம் தேதி புதுச்சேரி காவல்துறையினர் சென்றனர்.இதனிடையே புதுச்சேரி காவல் துறையினர் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக்கோரி,  நாஞ்சில் சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார்,நாஞ்சில் சம்பத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை துன்புறுத்த கூடாது என புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

331 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

86 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் புதிய கருவி - சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தயாரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் அவர்களை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் கருவியை சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

110 views

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய கல்குவாரிகள், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, நாமக்கல் மாவட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.

10 views

போக்குவரத்து காவலர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்...

சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி என்பவர் பணியின்போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

8 views

100 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய இளைஞர்கள், ஊர் மக்களின் மனிதநேயம்...

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் 100-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து 500-ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

13 views

ஈரோடு : தூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 views

ராணிப்பேட்டை : கொரோனா தொற்று இல்லை என உறுதியானதால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 பேர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய 17 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது.

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.