மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
பதிவு : மார்ச் 25, 2020, 03:37 AM
மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கெளபா, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடவடிக்கையை  பாராட்டி உள்ளார். அதே நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதையும்  சுட்டிக்காட்டி உள்ளார். கொரோனா பாதித்தவர்களை அறிந்து,  அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை இனம் கண்டு, பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டு உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.  கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட அளவிலான குழுக்களுடன், விரைவு குழுக்களை அமைக்கவும் கெளபா அறிவுறுத்தி உள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் இனம் கண்டறிவதுடன், சந்தேகப்படும் நபர் மற்றும் உயர் பாதிப்பில் உள்ளவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது  தலையாய கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதனை மாநில அளவில் சுகாதாரத் துறை செயலாளரும், மாவட்ட அளவில் ஆட்சியர்களும் நேரடியாகவும், தொடர்ந்தும் கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவமனைகளை உருவாக்குவதுடன், நோயாளிகள் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், அவர்களோடு தொடர்புடையவர்களை கண்டறிதல், பிரத்யேக மருத்துவமனை அமைப்பது உள்ளிட்ட பணிகளை தலைமை செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு, அது தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத் துறையின் இணைய தளத்தில் பதிவேற்றவும் மத்திய அமைச்சரவை செயலாளர், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களை அறிவுறுத்தி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

330 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

85 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

4 views

"இந்தியாவில் 40 கோடி பேர் ஏழைகளாக மாறுவர்" - ஐக்கிய நாடுகள் தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை

கொரோனா ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

9 views

ஊரடங்கால் டெல்லியில் குறைகிறது மாசு - தூய்மையான காற்றை சுவாசிக்கும் தலைநகர்வாசிகள்

ஊரடங்கு உத்தரவின் காரணமாக தலைநகர் டெல்லிவாசிகள் 3 வது வாரமாக தூய்மையான காற்றை சுவாசித்து வருகின்றனர்.

6 views

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தம் - 450 கி.மீ தூரத்திற்கு நடந்தே பயணம்

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டடதால் மேற்கு வங்கமாநிலம் ஹவுராவிலிருந்து 40 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பீகாரில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு ரயில்வே தண்டவாளங்களின் வழியே நடந்து செல்கின்றனர்.

12 views

டெல்லி எய்ம்ஸ்-ல் கிருமி நாசினி வளைவு அமைப்பு - மருத்துவர்கள், காவலர்கள், பொதுமக்கள் செல்ல ஏற்பாடு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கிருமி நாசினி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

12 views

கொரோனா மூட்டிய சண்டை - உடைந்த மண்டைகள் அதிர்ச்சியில் ஆந்திரா

கொரோனா மூட்டிய சண்டையில் ரத்தம் பார்த்த கிராமங்கள்... கல் வீச்சில் சிகிச்சை பெறும் ஆந்திர கிராமம் பற்றி தற்போது பார்க்கலாம்...

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.