அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் - முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு
பதிவு : மார்ச் 24, 2020, 02:09 PM
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

* அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கவும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

* டோக்கன் முறையில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும் என்றும், நிவாரண ரூபாய் பெற விருப்பம் இல்லாதவர்கள், மின்னணு செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என முதலமைச்சர் தெரிவித்தார்.  

*மார்ச் மாதம் வாங்க தவற விட்ட ரேஷன் பொருட்களை ஏப்ரல் மாதம் சேர்த்து வாங்கி கொள்ளலாம் என்றும் 110 விதியின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு சிறப்பு தொகுப்பாக ஆயிரம் ரூபாயும், 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்.

* இதே போல் பிற மாநிலங்களை சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்படும்.

* அங்கன் வாடி மையங்களில் உணவருந்தும் முதியோர்களுக்கு தேவையான உணவினை, அவர்கள் வசிக்கும் இடங்களில் வழங்குவதற்கு 
மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

* பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ், ஆயிரம் ரூபாயோடு சேர்த்து கூடுதலாக ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை விதி எண் 110 -ன் கீழ் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

302 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

68 views

பிற செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்.

21 views

தமிழகத்தில் 2,200 மெகாவாட் மின்சாரம் சேமிப்பு - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீடுகளில் விளக்குகள் அணைக்கப்பட்டதால் தமிழகத்தில் 2 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

26 views

"கொரோனா வைரஸ் பரவல் : ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்" - பிரதமர் மோடியிடம் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதில் சீரான நிலை ஏற்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

304 views

ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம் : "தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

143 views

பிரதமர் மோடி தலைமையில் 8-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு

பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடியை தொலைபேசயில் தொடர் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

92 views

தமிழகம் முழுவதும் விளக்கேற்றிய பொதுமக்கள்

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் ஒளி ஏற்றிவைத்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.