கோலாலம்பூரில் சிக்கி தவித்த 116 இந்தியர்கள் - மலேசிய விமானம் மூலம் சென்னை வருகை
பதிவு : மார்ச் 24, 2020, 07:39 AM
மாற்றம் : மார்ச் 24, 2020, 07:46 AM
கோலாலம்பூரில் சிக்கி தவித்த 116 பேர் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் முயற்சியால் மலேசிய விமானம் மூலம் சென்னை வந்தனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னைக்கு வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 18ந் தேதி வந்த 116 இந்தியர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். 5 நாட்களாக உணவின்றி தவித்த அவர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் சிலர் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து இருவரும்  மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து கோலாலம்பூரில் தவித்த116 பேரும் மலேசிய விமானம் மூலம் சென்னை வந்தனர். அந்த விமானம் சிறப்பு அனுமதியுடன் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக தாம்பரம் சிறப்பு மருத்துவமனைக்கு ராணுவ வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

600 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

224 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

45 views

பிற செய்திகள்

காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் : சோனியா, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் பங்கேற்பு

டெல்லியில் காணொலி மூலம், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

19 views

முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், காணொலி மூலம், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

84 views

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு - டெல்லி அரசு அறிவிப்பு

கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் இறப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

62 views

அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் ஆய்வு: அமைச்சர், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு

கதர் மற்றும் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், சட்டமன்ற உறுப்பினர் நெட்டூர் நாகராஜன் உள்ளிட்டோர் மானாமதுரை மற்றும் திருப்புவனம் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தினர்.

40 views

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி - பா.ஜ.க. வழங்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்

தங்கள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக கூறி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என பா.ஜ.க.வுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

96 views

கோவை : துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் , காந்திபுரம் வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.