துபாயிலிருந்து வந்த இளைஞர் தனி வீட்டில் அடைப்பு
பதிவு : மார்ச் 24, 2020, 03:41 AM
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, துபாயிலிருந்து வந்த இளைஞர் தனி வீட்டில் அடைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே,  துபாயிலிருந்து வந்த இளைஞர் தனி வீட்டில் அடைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். மண்ணச்சநல்லூர் அருகே, பிச்சாண்டார்கோயிலைச் சேர்ந்த சத்தியசீலன் துபாய் நாட்டில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சமீபத்தில்  மூளைபக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதையடுத்து, சொந்த ஊரில் தனி வீட்டில் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அச்சமடைந்த கிராம மக்கள், கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். சுகாதார துறையினர் நடத்திய விசாரணையில், அவரது சிகிச்சை விவரம் உண்மை என்றும்,  சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோன அறிகுறி சோதனைகளிலுல் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

46 views

பிற செய்திகள்

மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்றவரா நீங்கள்? - கவனமுடன் இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு மார்ச் 10 முதல் மார்ச் 17க்கு இடைப்பட்ட நாட்களில் சென்றவர்கள் கவனமாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

24 views

தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் : கிருமி நாசினிகளை வழங்கினார் ஆர்.எஸ்.பாரதி

கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் அணிவது மற்றும் கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

14 views

கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை

வறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ 10,000 கடனாகவும் 5 ஆயிரம் மானியமாகவும் உடனடியாக வழங்க வேண்டும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

11 views

அரசு மருத்துவமனையில் எம்.பி.திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

7 views

ஆன்லைன் மூலம் வகுப்புகள் - சென்னை பல்கலை. துணை வேந்தர் உத்தரவு

ஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

33 views

மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் தினசரி சந்தையை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.