கொரோனா தடுப்பு நடவடிக்கை - அரசுக்கு பாராட்டு
பதிவு : மார்ச் 24, 2020, 03:38 AM
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு, தேவையான முகக்கவசம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளை கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக சுகாதார துறை செயலாளர் பீலாராஜேஷ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பது தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் 2007ஆகவும், கொரோனா பரிசோதனை மையங்களை 7 ஆகவும் உயர்த்தி உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான முக கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என பரவும் தகவல்கள் குறித்து, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு  அரசு தரப்பில் 15,500க்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் இருப்பதாகவும், மேலும் ஒன்றரை லட்சம் முக கவசங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன்,  பாதுகாப்பு கவசங்கள் இன்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் யாரும் ஈடுபடவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தடுப்பு நடவடிக்கை பொருட்கள் அனைத்தையும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களுக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் பணிக்கு பாராட்டும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

328 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

84 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

72 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

29 views

பிற செய்திகள்

வேட்டியை கிழித்து மாஸ்க் கட்டிய நபர் - வங்கியில் நடந்த சம்பவம் - வேகமாக பரவும் வீடியோ

பொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் வங்கிக்கு வந்த நபர் திடீரென மாஸ்க்கை உருவாக்கிய காட்சி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

73 views

மருத்துவமனையில் எம்.பி.ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு - தனிமைபடுத்தப்பட்ட நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்

ராணி பேட்டை மாவட்டம் வாலாஜபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

41 views

சில்லரை விற்பனையில் அதிக விலையில் காய்கறிகள் : பொதுமக்கள் அதிர்ச்சி - அதிகாரிகள் எச்சரிக்கை

நெல்லையில், மொத்த விற்பனை காய்கறி சந்தையை விட, சில்லரை விற்பனை காய்கறி சந்தையில், காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

59 views

திருவள்ளூரில் கொரோனாவால் 12 பேர் பாதிப்பு

திருவள்ளூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

19 views

மூன்று வண்ணங்களில் அடையாள அட்டை : வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க அனுமதி

அரியலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் வாரத்தில் 2நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

22 views

உயர்நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை - சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்

உயர்நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் காணொலி காட்சி வாயிலான விசாரணை நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கியுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.