கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் ரூ.500 கோடி
பதிவு : மார்ச் 24, 2020, 03:35 AM
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை, உயர்த்தப்படும் என்றார். கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், இருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களின் வீட்டுக்கதவில், தனிமை படுத்தப்பட்டவர்கள் என்ற விவரம் ஒட்டப்படும் என்று கூறினார். தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கான படுக்கைகள் 25 சதவீதம் ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார். தலைமை செயலாளர் தலைமையில், டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு, அந்த கூட்டமும் அவ்வப்போது நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.தாமும், நாள்தோறும் ஆய்வுசெய்து நி​லைமையை கண்காணித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். விமான நிலையத்தில் சோதனையிடப்பட்டவர்களில் வீட்டு கண்காணிப்பில் 9 ஆயிரத்து 424 பேரும், அரசு கண்காணிப்பில் 198 பேரும் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்ததார்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

330 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

85 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்கு நெல்லை மாவட்டத்தில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் இன்று குணமடைந்தார்.

1 views

சிவகங்கை : கொரோனா நோய் பற்றிய மெகா ஓவியங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மெகா ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

2 views

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் - கட்டுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதால், அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

5 views

"15 சதவீத வாகனங்களே இயங்குகின்றன" - மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பு குற்றச்சாட்டு

அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

6 views

காவல்துறை சார்பில் கிருமி நாசினி சுரங்கப்பாதை

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பொதுமக்களுக்காக கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

8 views

சமூக இடைவெளி பின்பற்றாமல் சந்தையில் கூடும் பொது மக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காய்கறி சந்தையில் வழக்கம்போல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளின் முன் சமூக இடைவெளி இல்லாமல் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.