சுய ஊரடங்குக்கு பின் தமிழகம்...
பதிவு : மார்ச் 23, 2020, 02:37 PM
சுய ஊரடங்குக்கு பிறகு பல்வேறு நகரங்களின் நிலைமை குறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டாலும், விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். சுய ஊரடங்கு நிறைவடைந்து திண்டுக்கல் காந்தி மார்க்கெட் இன்று திறக்கப்பட்டது. ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் 30 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனையாக காரட் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது தவிர பல காய்கறிகள் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஆம்பூர்

ஆம்பூரில் அரசு மருத்துவனையில் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று நோயாளிகள், மருந்து, மாத்திரை வாங்கி சென்றனர். மக்களுக்கு முக கவசம் அணியவும், கைகளை கழுவ‌வும் அறிவுறுத்தப்பட்டது. நேற்றுவிடுமுறைக்கு பின் மார்க்கெட் திறக்கப்பட்டதால், காய்கறிகள் வாங்க  பொதுமக்கள் குவிந்த‌னர். 

காரைக்கால்

புதுச்சேரி மாநில எல்லையான காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் சோதனை சாவடியில் பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் தெர்மல் மீட்டர் கருவி கொண்டு பயணிகளை பரிசோதித்து வருகின்றனர். பேருந்திலும் பயணிகள் முகக்கவசம் அணிந்தபடியே பயணித்து வருகின்றனர்.


நாமக்கல்

ஈரோடு மாவட்ட எல்லை கடந்து நாமக்கல் வரும் பயணிகளை போலீசார் விசாரணைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி பயணிக்கும் பயணிகளை போலீசார் அறிவுரை வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதே சமயம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் காவரி ஆற்று பாலங்கள் அடைக்கப்பட்டதால், தேர்வு எழுத சென்ற மாணவர்கள் அவதி அடைந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

288 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

64 views

பிற செய்திகள்

வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி - பயிற்சி வழங்கும் ஜிம் மாஸ்டர்

144 தடை உத்தரவால் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

59 views

திருச்சி - தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மீது தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

10 views

வீடுகளுக்கே சென்று நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டம்: சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுதேடி சென்று அரசின் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

12 views

சுகாதார ஆய்வாளரை தாக்க முயன்ற பொதுமக்கள்- கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த‌தால் ஆத்திரம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்த கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த சுகாதார ஆய்வாளரை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

11 views

ஊரடங்கை மீறிய இளைஞர்கள் - மரத்தில் ஏறும் தண்டனை வழங்கிய போலீசார்

தூத்துக்குடியில் 144 தடையை மீறி தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

10 views

தனிமையில் இருப்பதையே கொண்டாட்டமாக மாற்றிய மக்கள் : கலகலப்பூட்டும் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக மாற்றி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற காட்சிகளின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.