"கொரோனா காற்றில் பரவாது" - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர்
பதிவு : மார்ச் 22, 2020, 10:34 PM
கொரோனா காற்றில் பரவாது, தும்மலின் போது வெளிவரும் நீர்த்துளி மூலம் பரவும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் இருக்கிறதா என இதுவரை 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் சோதனைகள் நடத்தியுள்ளதாக கூறியுள்ளார். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் சோதனைகளை நடத்தும் திறன் தங்களிடம் உள்ளதாக தெரிவித்தார். வாரத்திற்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் சோதனைகள் நடத்தலாம் என்றும், வியாதியைப் புரிந்துகொள்வது அவசியம் எனவும் கூறியுள்ளார். 80 சதவீத மக்கள் குளிர் போன்ற காய்ச்சலை அனுபவிப்பார்கள் என்றும், அவர்கள் குணமடைவார்கள் எனவும் கூறியுள்ளார். 20 சதவீதம் பேர் இருமல், சளி, காய்ச்சலை அனுபவிக்கலாம் என்றும், அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். பரிமாற்ற சங்கிலியை உடைக்க, வெளியில் இருந்து வரும் மக்களை தனிமைப்படுத்துவதே எளிதான முறை என்று கூறிய  பார்கவா, கொரோனா வைரஸ் காற்றில் பரவாது எனவும், வெளியிடப்பட்ட நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கொரோனா - நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

238 views

பிற செய்திகள்

கோவா மாநிலத்தில் சிக்கியுள்ள 200 தமிழர்கள் : உணவு, இருப்பிடம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு

கோவா மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 200 பேருக்கு, உணவு தங்குமிடத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

7 views

வரும் ஏப்ரல் -2 -ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

6 views

பிரதமரின் கொரோனா நிவாரண நிதி - பதஞ்சலி நிறுவனம் ரூ. 25 கோடி வழங்கும் என அறிவிப்பு

பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனம் 25 கோடி ரூபாய் வழங்க உள்ளது.

9 views

சத்தீஸ்கர் : பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ்காரர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

8 views

டெல்லியில் மருத்துவமனைகளில் 2 ஷிப்ட் - 14 நாள் தொடர்ந்து பணியாற்ற அறிவுறுத்தல்

"COVID-19 மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 ஷிப்ட்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.கே. ஜெயின் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

127 views

"சமூக விலகல் குறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" - பிரதமர் மோடி

நாட்டிலுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.