"அரசு பரிந்துரைக்கும் காலம் வரை சுயதனிமை" - பொதுமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்
பதிவு : மார்ச் 22, 2020, 10:29 PM
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை சுயதனிமையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று நடிகர் ரஜினி காந்த் பொதுமக்கள் 12 மணிநேரம் முதல் 14 மணி நேரம் வரை வெளியில் நடமாடாமல் இருந்தாலே, கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு விடும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஒரு நாள் மட்டும் என்று கால அளவினை குறிப்பிட்டு ரஜினி ட்விட்டரில் கருத்து தெரிவித்ததை அடுத்து ட்விட்டர் நிர்வாகம் அந்த பதிவினை நீக்கியது. இந்நிலையில் ரஜினி இன்று மீண்டும் வெளியிட்ட ட்விட்டரில், அரசு பரிந்துரைக்கும் காலம் வரை மக்கள் சுயதனிமையை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதன்மூலம் கொடிய வைரஸான கொரோனாவை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம் எனவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய காணொலியின் நோக்கத்தை புரிந்து கொண்டு மக்களிடம் சரியான முறையில் தமது பதிவை கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி எனவும் ட்விட்டர் பக்கத்தில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.  இதனிடையே, கொரோனா குறித்த துல்லியமான தகவல்களைப் பரப்புவதை உறுதி செய்வதில் தங்களுடன் இணைந்ததற்கு நன்றி தலைவா என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

330 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

85 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை : தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உட்பட 6 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தாமரைக்கனிக்கும், அதே பகுதியை சேர்ந்த கணபதி சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

0 views

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்கு நெல்லை மாவட்டத்தில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் இன்று குணமடைந்தார்.

2 views

சிவகங்கை : கொரோனா நோய் பற்றிய மெகா ஓவியங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மெகா ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

2 views

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் - கட்டுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதால், அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

5 views

"15 சதவீத வாகனங்களே இயங்குகின்றன" - மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பு குற்றச்சாட்டு

அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

6 views

காவல்துறை சார்பில் கிருமி நாசினி சுரங்கப்பாதை

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பொதுமக்களுக்காக கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.