இத்தாலியை வாட்டி வதைக்கும் கொரோனா...
பதிவு : மார்ச் 22, 2020, 11:19 AM
கொரோனா தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று.
* மார்ச் தொடக்கத்தில்தான் இத்தாலியில் கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டது. ஆனால் மிக வேகமாக 40 ஆயிரம் பேர் வரை தொற்று ஏற்பட்டது. தற்போதுவரை இறப்பு விகிதம் 8 சதவீதமாக இருக்கிறது. 

* ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* விமான நிலையங்ங்கள், பள்ளி, கல்லூரி, தேவாலயங்கள், மைதானங்கள் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* உடற்பயிற்சி  மையங்கள், சினிமா, இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் எதுவும் இயங்கவில்லை.

* ஓட்டல்கள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. மக்கள்1 மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய தேவைகளுக்கு போலீஸ் அனுமதியுடன் பயணம் செய்யலாம். 

* வாகனங்கள் போலீஸ் சோதனைகளுக்கு பின்னரே சாலைகளில் அனுமதிக்கப்படுகின்றன.
 
* மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் விடுமுறை இல்லாமல் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

* சிறைச்சாலைகளில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

* செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் அரசு ரத்து செய்துள்ளது.

* நோய் அறிகுறி அறிந்த பின்னர், தங்களை  தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தொந்தரவு அளித்த 40 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

* இதற்கிடையே, மனநெருக்கடியில் இருந்து வெளிவர மக்கள், மாடிகளில் நின்று இசைக் கருவுகளை இசைத்து மகிழ்வதும் சமூக வலைதளங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

666 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

319 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

106 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

74 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

72 views

பிற செய்திகள்

"கொரோனா போரில் நிச்சயம் வெல்வோம்" - ராணி எலிசபெத் உரை

கொரோனா போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என இங்கிலாந்து ராணி எலிசபெத், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

21 views

விமான நிறுவன முதலீடுகளை குறைக்கும் வாரன் பஃபெட் : வளர்ச்சி குறையும் என்பதால் பங்குச் சந்தைக்கு கடிதம்

பங்குச் சந்தை மன்னர் என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் விமான நிறுவன பங்குகளில் இருந்து, தனது முதலீடுகளை விலக்கிக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

14 views

விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா - அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

109 views

சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு - நேற்று மட்டும் 3 பேர் உயிரிழப்பு

சீனாவில் நேற்று மட்டும் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

167 views

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா - 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு

கொரோனாவை கட்டுப்படுத்த உலகெங்கும் 40 நாடுகளுக்கு மேல் முழு ஊரடங்கு அல்லது பகுதி சார்ந்த ஊரடங்கு அமலில் உள்ளது...

623 views

நியூயார்க்கில் மட்டும் 3500 பேர் கொரோனாவுக்கு பலி

அமெரிக்காவில் கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான நியூயார்க்கில் மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.