ஓமனில் இருந்து வந்தவருக்கு காய்ச்சல் அறிகுறியா? - தவறான தகவலால் பரபரப்பு
பதிவு : மார்ச் 22, 2020, 07:19 AM
ஓமனில் இருந்து வந்தவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக தகவல் பரவியதை அடுத்து, ஆம்னி பேருந்தை போலீசார் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் குமராட்சி சேர்ந்த ஒருவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். அவர் சென்னைக்கு வந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் அவருக்கு  காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.  இந்த நிலையில், சென்னையில் இருந்து தப்பித்து ஆம்னி பேருந்து மூலம் சிதம்பரம் வருவதாக தகவல் பரவியதை அடுத்து, அந்த பேருந்தை புதுச்சேரி -  கடலூர் சாலையில் கங்கனாங்குப்பம் என்ற இடத்தில் கடலூர் போலீசார் வழி மறித்தனர். இதையடுத்து அந்த பேருந்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு, ஓமன் நாட்டில் இருந்து வந்தவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் நல்ல உடல்நிலையில் உள்ளதாகவும், தேவையில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் மீண்டும் அதே பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

715 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

362 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

93 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

60 views

பிற செய்திகள்

கோடை மழையால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் - குளிப்பதற்கு ஆள் இல்லாததால் வெறிச்சோடிய அருவிக்கரை

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையால், பிரதான அருவியில் காலையில் இருந்து தண்ணீர் வருகிறது.

35 views

ஓவியங்கள் வரைந்து அனுப்பும் மாணவர்கள் - பாராட்டி பரிசு வழங்கும் ஓவியர்கள்

சிவகங்கையில் ஓவியர் ஒருவரின் முயற்சியால் சிறுவர், சிறுமியர் ஓவியம் வரைந்து பொழுதை கழிக்கின்றனர்.

24 views

மருத்துவ பணியாளர்களுக்கான சிறப்பு உடை- இரவு பகலாக தொடரும் உடை தயாரிப்பு

கடலூரில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கான சிறப்பு உடை தயார் செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

14 views

வெளிமாநிலத் தொழிலாளர்கள் எத்தனை பேர்? - விவரங்களை அனுப்ப ஆட்சியர்களுக்கு, தொழிலாளர் நலத்துறை சுற்றறிக்கை

தமிழகம் முழுவதும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதற்கான பட்டியலை அனுப்பி வைக்​குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

27 views

வீட்டில் இருந்தே ஆன்லைனில் பாடம் படிக்கும் மாணவர்கள் - கேந்திரிய வித்யாலயா பள்ளி சிறப்பு ஏற்பாடு

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.

66 views

மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு திட்டம்

மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

106 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.