கொரோனா தாக்கம்: வீடுகளில் முடங்கிய மக்கள் - இந்திய தொழில்துறை கடும் பாதிப்பு
பதிவு : மார்ச் 20, 2020, 04:11 PM
கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இல்லாத வகையில் இந்திய தொழில்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தினால் சுற்றுலாத்துறை, விமான நிறுவனங்கள் ஆகியவை பெரும் இழப்பினை சந்தித்துள்ளன. சுற்றுலா துறையில் சுமார் 70 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளதாக இந்திய சுற்றுலா சங்கங்களில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 4 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதுடன், ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் விமான சேவை நிறுவனங்களில் இழப்பு சுமார் 40 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 600 சர்வதேச விமானங்கள் இந்தியாவுக்கான சேவையை நிறுத்தியுள்ளன. இந்தியாவில் இருந்து 500 சர்வதேச சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளன. விமான நிறுவன ஊழியர்கள் வேலை இழந்துள்ள நிலையில், இன்டிகோ நிறுவனம் 25 சதவீதம் வரை சம்பள பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகள் செயல்பாட்டு இழப்பை சந்தித்து வருகின்றன. பெரிய நகரங்களில் கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் திரையரங்குகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், 30 சதவீத வர்த்தக இழப்பை கண்டுள்ளன. மக்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளதுடன், வீடுகளில் முடங்கி உள்ளதால், அவர்களது வாங்கும் சக்தியும் குறைந்துள்ளது. கிரெடிட் கார்டு, வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றை திருப்பி செலுத்துவதிலும் சிக்கல் உருவாக உள்ளது. போக்குவரத்து வாகனங்களின் பயன்பாடு குறைந்து பெட்ரோல், டீசலின் பயன்பாடும் குறைந்துள்ளதால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியில்கூட, ஸ்திரமாக இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது அவ்வாறு நிற்காது என கணிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கை போல நிலைமைகள் உள்ளதாகவும், அந்த நினைவுகளை மறந்த நிலையில், தற்போது அதைவிட மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

328 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

84 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

72 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

29 views

ஈரானில் சிக்கிய ஷியா யாத்ரீகர்கள் : தொடர்ந்து கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்றது.

13 views

பிற செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் மரணம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்

கேரளாவின் பிரபல இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் திங்கள்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.

11 views

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் : நகைச்சுவையான வீடியோக்களை டிக் டாக்கில் பதிவேற்றி மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக நடித்துக்காட்டி விதவிதமான டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

26 views

எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு

குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்கள், மற்றும் எம்பிக்கள் ஊதியம் 30 சதவீதம குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

20 views

"சுதந்திரத்துக்கு பின் மோசமான பொருளாதார நெருக்கடி நிலை" - பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன்

கொரோனா ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்புகள் குறித்து தமது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜன், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

21 views

கைகளில் விளக்குடன் கூட்டமாக கிளம்பிய மக்கள்..

இந்தியாவின் பல்வேறு இடங்களில் நேற்று நடைபெற்ற ஒளியேற்றும் நிகழ்வின் போது, ஒரு சிலர் கூட்டம் கூட்டமாக, விளக்குகளை ஏந்தி சென்றனர். அந்த காட்சிகளை பார்ப்போம்.

8 views

பாஜக - 40 வது ஆண்டு துவக்க விழா : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கட்சியை கட்டமைக்க பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து மறைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.