சீனாவின் கனவு திட்டத்தில் இணைந்த நாடுகளின் எண்ணத்தில் பேரிடியை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்
பதிவு : மார்ச் 20, 2020, 03:51 PM
சர்வதேச மாற்று பொருளாதார கட்டமைப்பை உருவாக்க சீனாவின் கனவு திட்டத்தில் இணைந்த நாடுகள் கொரோனா வைரசால் உயிர் மற்றும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களை சேர்ந்த நாடுகளை முன்னிலைப்படுத்தி சர்வதேச மாற்று பொருளாதார கட்டமைப்பை உருவாக்க சீனா ONE BELT ONE ROAD திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் அண்மையில் ஈரான் மற்றும் இத்தாலி இணைந்தன. 

இந்நிலையில் சீன மூலதனத்தில் அந்நாட்டு பணியாளர்களை கொண்டு பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் இந்த நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தங்கள் நாட்டு பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்டு, உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கலாம் என்ற அந்த நாடுகளின் எண்ணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் பேரிடியை ஏற்படுத்தி உள்ளது என பொருளாதார வல்லூநர்கள் தெரிவித்துள்ளனர். 

குறுகிய கால பலன்கள் மற்றும் அவசரப்பட்ட முடிவுகளால் இன்று அந்த நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாக பல துறை வல்லூநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இத்தாலியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இதேபோன்று ஈரானில் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டு ஆயிரத்து 1135 பேர் உயிரிழந்துள்ளனர் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தானில் 304 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதற்கும் சீனர்கள் தான் காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது. அங்கு நடைபெற்று வரும், சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடப் பணிகளில் சீனர்கள் ஏராளமானோர் பணியாற்றி வரும் நிலையில், அதுதான் காரணமோ என்ற அச்சம் பாகிஸ்தானில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 
ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி G 7  நாடுகளில் ஒன்றான இத்தாலி சீனா உடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. மால்டா, கிரீஸ், போர்த்துக்கல் போன்ற நாடுகள் கையெழுத்திட்டதை சுட்டிக்காட்டி உள்ள, இத்தாலி தன் மீதான விமர்சனத்தை நிராகரித்துள்ளது. 

இத்தாலியில் லம்பார்டி என்ற இடத்தில் தான் கொரோனா தாக்கம் முதன் முதலாக தெரியவந்தது. இங்கு சீன முதலீடு அதிகளவில் உள்ள நிலையில், இந்த பகுதி இத்தாலி நாட்டில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இதே போன்ற நிலை தான் ஈரானிலும் நிலவுவதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

311 views

கொரோனா - நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

237 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

67 views

"புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை"

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

31 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு - அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட உள்ளது.

1043 views

காசநோய்க்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்தினை கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்த ஆஸ்திரேலியா அரசு திட்டம்

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக பல நாடுகளும் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா அரசு காசநோய்க்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்தினை கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

13 views

மனிதர்களுக்கு பின் உலகம் - கற்பனை ஓவியம்

கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கி இருக்கும் நிலையில், இது தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்ற ஒரு கலைஞனின் கற்பனை ஓவியம்,ரசிக்கும் வகையில் இருந்தாலும்,அது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

1765 views

கொரோனாவுக்கு மருந்து தான் என்ன ?

சீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கொடுக்கப்பட்டது.

29 views

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - தப்பி செல்ல சிறை கைதிகள் வன்முறை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தில் சிறையில் இருந்து தப்பி செல்வதற்காக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர்.

116 views

சீனாவில் மீண்டும் இயல்பு நிலை - அனைத்து போக்குவரத்து சேவைகள் தொடக்கம்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சீனாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

1112 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.