நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பவன் ஜல்லாத்துக்கு குவியும் பாராட்டுகள்...
பதிவு : மார்ச் 20, 2020, 08:39 AM
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள சிறையில் பணியில் ஈடுபட்டு வரும் பவன் ஜல்லாத் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியில் ஈடுபட்டவர்.
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நாளில் இருந்தே அடிபட்ட பெயர் பவன் ஜல்லாத். 

* உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள சிறையில் பணியில் ஈடுபட்டு வரும் பவன் ஜல்லாத் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியில் ஈடுபட்டவர். 

* ஏற்கனவே திகார் சிறையில் இதே பணியை செய்பவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் சிறை நிர்வாகம் பவன் ஜல்லாத்தை வரவழைத்தது.  இவரது தந்தை பாபு ஜல்லாத், தாத்தா கல்லு ஜல்லாத் ஆகியோரும் தூக்கிலிடும் பணியை செய்தவர்களே.. 

* 3வது தலைமுறையாக பவன் ஜல்லாத் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இதுவரை நேரடியாக இவர் யாரையும் தூக்கிலிட்டதில்லையாம். அவரது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் தூக்கிலிடும் பணியில் ஈடுபட்ட போது அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் பவன் ஜல்லாத். 

* ஆனால் இப்போது நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்டதே இவருக்கு முதல் பணி. இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாததால் இவருக்கு வேலை வாய்ப்பும் இல்லாமல் சிறையில் சாதாரண பணியில் இருந்துள்ளார். மாதம் 5 ஆயிரம் ரூபாய் வருமானத்தில் வறுமையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

* மகளுக்கு திருமணத்தை நடத்த திட்டமிட்ட அவருக்கு, போதிய பணவசதி இல்லாததால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் நிர்பயா வழக்கில் இவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ஒருவரை தூக்கிலிட 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கும் என்பதால் இதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார் பவன் ஜல்லாத். 

* நிர்பயா சம்பவத்தை கேட்டபோதே தனக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறும் அவர், அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கும்  பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டது மனநிறைவை தந்ததாகவும் கூறியிருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

720 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

373 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

135 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

94 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

71 views

பிற செய்திகள்

தானியங்களை கொள்முதல் செய்ய என்.ஜி.ஓக்களுக்கு அனுமதி - இந்திய உணவு கழகத்துக்கு அரசு உத்தரவு

நிவாரணப் பணிகளுக்காக இந்திய உணவுக்கழகத்திடமிருந்து நேரடியாக உணவு தானியங்களை கொள்முதல் செய்ய அரசு சாரா அமைப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

18 views

"எம்எல்ஏக்கள் மாத ஊதியத்தில் 30% தரவேண்டும்"- கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, கர்நாடகாவில், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தங்கள் மாத ஊதியத்தில், 30 சதவீதத்தை, ஒராண்டிற்கு தொடர்ந்து வழங்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

21 views

தூய்மை பணியாளர்களுக்கு சேவை செய்து வரும் மருத்துவர்

நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், உணவு வழங்கி சேவையாற்றி வருகிறார்.

12 views

கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா? - அறிய உதவும் 'குரல்வழி சேவை' தொலை பேசி எண் அறிமுகம் - 94999 12345- ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்

கொரோனா அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறிய 'குரல் வழி சேவை' அவசர உதவி தொலை பேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

9 views

"தாக்கம் குறைந்தால் விமான சேவை தொடங்கப்படும்" - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின், விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

34 views

கொரோனா காலத்தில் லாபம் ஈட்டிய 'டி மார்ட்' - அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்குவித்த மக்கள்

கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்திலும், இந்தியாவின் முன்னணி சில்லரை வர்த்தக அங்காடியான டிமார்ட் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

1051 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.