நிர்பயா வழக்கு - இறுதி மனுவும் தள்ளுபடி : டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : மார்ச் 20, 2020, 12:38 AM
தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரி நிர்பயா குற்றவாளிகளின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரி நிர்பயா குற்றவாளிகளின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனு நீதிபதி மன்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த ஆவணமும் இல்லாமல் மனு உள்ளதாகவும், மனுவை தாக்கல் செய்வதற்கு  குற்றவாளிகளிடம் அனுமதி பெறப்பட்டதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கொரோனா வைரஸ் காரணமாக ஆவணங்களை நகல் எடுக்க முடியவில்லை என்றும், எனவே காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தண்டனை நிறைவேற்றத்துக்கு சில  மணி நேரத்துக்கு முன்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  எந்தவித சட்ட அடிப்படையும் இல்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

288 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

64 views

பிற செய்திகள்

பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

66 views

கொரோனா வதந்தி - சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது புகார்- டிக் டாக் அறிவிப்பு

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

11 views

"கொரோனா - போதிய பரிசோதனைகள் செய்யப்படவில்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

65 views

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு, அவை நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அதிகாரம் பொருந்திய குழுக்களின் கூட்டுக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

12 views

பங்குச் சந்தை வர்த்தக நேரம் குறைப்பு : முதலீட்டாளர்களின் இழப்பால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

172 views

ஸ்டாலினிடம் தமிழக நிலையை குறித்து செல்போனில் கேட்டறிந்தார் சோனியா காந்தி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.