ராஜீவ் கொலை வழக்கு ஆயுள் கைதிகள் விடுதலை கோரும் விவகாரம் - ஏப்ரல் 7-க்கு வழக்கை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
பதிவு : மார்ச் 19, 2020, 06:48 PM
தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய ஆளுநரின் செயலை அரசியல் சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டுமென்றும் ஆளுனரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய ஆளுநரின் செயலை அரசியல் சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டுமென்றும், ஆளுனரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு, ஆளுநரின் செயலை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க கோரிய இந்த மனு விசாரணைக்கு தானா என்பதை முடிவு செய்ய வேண்டி உள்ளதாகவும், கைது  முதல் விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரைத்தது வரையிலான முழு விவரங்களை நளினி தரப்பு  தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

பிற செய்திகள்

மது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி

மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 views

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

22 views

தனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்

தனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

18 views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

114 views

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

318 views

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு - காவல்துறையினர் நூதன பிரசாரம்

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

76 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.