லஞ்ச புகாரில் கைதான பெண் அதிகாரி பலியான பரிதாபம்
பதிவு : மார்ச் 19, 2020, 06:40 PM
லஞ்ச புகாரில் கைதான பெண் அதிகாரியை நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர் ஜெயராணி. 50 வயதான இவர், இதற்கு முன் தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். 

கடந்த 9 மாதங்களுக்கு முன் பதவி உயர்வு பெற்ற அவர், பரமத்தி ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்திற்கு வந்தார். கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வந்த அவரிடம் வீட்டு மனை பிரிப்புக்கு அனுமதி வழங்க வேண்டி ரமேஷ் என்பவர் மனு அளித்துள்ளார். 

அப்போது ரமேஷிடம் ஜெயராணி 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரமேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவிக்கவே அவர்கள் ஜெயராணியை பொறி வைத்து கையும் களவுமாக பிடித்தனர். 

கைது செய்யப்பட்ட அவரை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்விழி முன்னிலையில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென தனக்கு நெஞ்சுவலிப்பதாக ஜெயராணி கூறியுள்ளார். உடனடியாக அவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதற்கு முன் எந்த லஞ்சபுகாரிலும் ஜெயராணி சிக்கியதில்லை என்றும் அவருடன் பணியாற்றியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் முதல் முறையாக அவர் வாங்கிய லஞ்சமே இன்று அவரின் உயிருக்கு உலை வைத்திருக்கிறது... 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

703 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

354 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

88 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

46 views

பிற செய்திகள்

உண்டியலில் சேர்த்து வைத்த பணம் : கொரோனா நிதிக்காக வழங்கிய மாணவர்கள்

கும்பகோணத்தில் முதலாம் வகுப்பு மாணவி மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவன் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொரோணா நிதிக்காக வழங்கி உள்ளனர்.

21 views

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில், பரிசோதனை மேற்கொள்ள கூடிய, கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

8 views

"திருவேற்காடு அம்மா உணவகத்தில் முட்டை, வாழைப்பழம்" - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

ஆதரவற்றோருக்கு, அம்மா உணவகத்தில் சத்தான உணவு கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

11 views

தமிழகத்தில் 14 துணை உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

தமிழகத்தில் 14 துணை, உதவியாளர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

11 views

"தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

80 views

அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு - மக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்

கரூரில் அரசு மருத்துவமனை அம்மா உணவகங்கள் மற்றும் தீயணைப்பு துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.