மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை - கொரோனா பரிசோதனை செய்ய முடியாமல் மக்கள் அவதி
பதிவு : மார்ச் 19, 2020, 04:42 PM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திரும்பிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால், நோயாளிகள் திரும்பிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. கொரோனா அறிகுறியாக இருமலும், காய்ச்சலும் கூறப்படும் நிலையில், அங்கு பரிசோதனைக்கு வரும் கிராமப்புற மக்கள், பரிசோதிக்க மருத்துவர்கள் இல்லாததால் வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர். மன்னார்குடியைச் சுற்றிய 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நீண்ட நேரமாக காத்திருந்தும் சிகிச்சைபெற முடியாமல் திரும்பும் நிலையில், கூடுதல் மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரியுள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.