காங்., எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த விவகாரம் : "முறையான செயல் அல்ல" - ரவிசங்கர் பிரசாத்
பதிவு : மார்ச் 19, 2020, 01:41 PM
மாநிலங்களவை எம்.பி.யாக, ரஞ்சன் கோகாய் நியமனம் செய்யப்பட்டதற்கு, நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது.
மாநிலங்களவை எம்.பி.யாக, ரஞ்சன் கோகாய் நியமனம் செய்யப்பட்டதற்கு, நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. மாநிலங்களவை இன்று காலை கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ரஞ்சன் கோகாய் பதவி ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். 

இதனிடையே, வெளிநடப்பு குறித்து மாநிலங்களவையில் பேசிய, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பல்வேறு துறைகளில் இருந்தும், அவைக்கு உறுப்பினராக வருவது வரவேற்கத்தக்கது என்றார். எம்.பியாக பதவியேற்றுக்கொண்ட ரஞ்சன் கோகாய், சிறப்பாக பணியாற்றுவார் என உறுதிபட நம்புவதாக கூறினார். அதே சமயம், புதிய உறுப்பினர்​நியமனத்தை விமர்சித்து வெளிநடப்பு செய்வது முறையான செயல் அல்ல என்றும் அவர் கூறினார். 

பிற செய்திகள்

சமூக விலகலுக்கு சிங்கப்பூரை பின்பற்ற வேண்டும் - ராமதாஸ்

சமூக விலகலுக்கு சிங்கப்பூரில் கடைபிடிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

33 views

ஓரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைப்பு - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

'ஒரே நாடு ஒரே ரேசன்' திட்ட அமலாக்கம் ஒத்தி வைக்கப்படுவதாக, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

124 views

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கினார்

கொரோனா நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வழங்கி உள்ளார்.

33 views

கொரோனா - திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்றும், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் செயலாளர்களாக செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

614 views

கொரோனா தடுப்பு - கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

104 views

கொரோனா தடுப்பு - முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதி

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.