"கொரோனா வைரஸ் - ஏப்ரல் இறுதிக்குள் மருந்து" - அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை
பதிவு : மார்ச் 18, 2020, 11:33 PM
ஏப்ரல் மாத இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக தெரிவித்தார். கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி என்றும், அதனை அழித்தே தீருவோம் என்றும் அவர்  தெரிவித்தார். கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் சோதனை துவங்கியுள்ளோம் என்றும் டிரம்ப் கூறினார். மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவ தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கான  மருந்து தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்தார். நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்களுக்கு 15 அறிவுரைகள் வழங்கியுள்ளதாகவும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை கோவிட் 19 வைரஸ் ஏற்படுத்தி இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். நியூயார்க் துறைமுகத்தில் ராணுவ மருத்துவமனை கப்பல் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

224 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

45 views

பிற செய்திகள்

ரோமா​னியா நாட்டில் சிக்கி தவிக்கும் 120 இந்தியர்கள் - உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரோமா​னியா நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 120 பேரை மீட்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

34 views

அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவம் : ஒரே நாளில் 884 உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 884 பேர் உயிரிழந்துள்ளனர்.

197 views

கொரோனா தொற்று உள்ளதா? - கண்டறிய நாய்களுக்கு பயிற்சி...

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய, துப்பறியும் நாய்களுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

15 views

"ஹெச்.ஒன்.பி விசாவை வழங்குவதை நிறுத்த வேண்டும்"- அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வேண்டுகோள்

அமெரிக்காவில் ஹெச் ஒன் பி விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என, அதிபர் டிரம்புக்கு கோரிக்கை வந்துள்ளது.

14 views

ரஷிய அதிபர் புதினுக்கு கொரோனா பாதிப்பா?: கை குலுக்கிய மருத்துவருக்கு கொரோனா தொற்று

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைக்கு, அதிபர் புதின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

34 views

கொரோனா உயிரிழப்பு 9000 - ஐ கடந்தது - ஒரே நாளில் 884 உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.