"2ஜி விவகாரத்தில் விவாதம் நடத்த தயாரா?" - தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆவேசம்
பதிவு : மார்ச் 18, 2020, 06:24 PM
2ஜி விவகாரத்தை முன்வைத்து திமுக மற்றும் ஆளும் கட்சிக்கும் இடையே மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
மக்களவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் ஆ. ராசா,  2ஜி அலைக்கற்றையில் சுமார் ஒரு லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என குற்றம்சாட்டி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் வசூலிக்க வேண்டிய ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு சலுகை அளிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு, பதிலளித்துப் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,  தொலைத்தொடர்பு துறை நிலைக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக  தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் நேரத்தில், வாடிக்கையாளர்களும்  பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.  காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்பது குறித்து, அவையில் ஒருநாள் முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத் ஆவேசமாக குறிப்பிட்டார். அதற்கு அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.  2 ஜி விவகாரத்தை முன்வைத்து நடைபெற்ற காரசார விவாதத்தால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

634 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

288 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

64 views

பிற செய்திகள்

பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

67 views

கொரோனா வதந்தி - சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது புகார்- டிக் டாக் அறிவிப்பு

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

11 views

"கொரோனா - போதிய பரிசோதனைகள் செய்யப்படவில்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

66 views

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு, அவை நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அதிகாரம் பொருந்திய குழுக்களின் கூட்டுக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

13 views

பங்குச் சந்தை வர்த்தக நேரம் குறைப்பு : முதலீட்டாளர்களின் இழப்பால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

172 views

ஸ்டாலினிடம் தமிழக நிலையை குறித்து செல்போனில் கேட்டறிந்தார் சோனியா காந்தி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.