தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம்
பதிவு : மார்ச் 18, 2020, 06:14 PM
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இன்று இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. நெல்லை குலவணிகர்புரத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சேலத்திலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். சிதம்பரத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைகளுடன் இஸ்லாமிய பெண்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல், கடலூர் தலைமை தபால் நிலையம் எதிரில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கைகளில் தேசிய கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பிற செய்திகள்

தூய்மை காவலர்களுக்கு பாத பூஜை : பரிசுப் பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவி

அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களை கவுரவிக்கும் வகையில் மன்ற தலைவி சந்திரா பாதபூஜை செய்தார்.

20 views

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி வழி மனநல ஆலோசனை

சென்னை மாநகரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

107 views

கட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு தண்டனை வழங்கிய போலீசார்

சென்னை குன்றத்தூரில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே திரிந்த வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் தண்டனை விதித்தனர்.

19 views

நாள்தோறும் 5000 பேரின் பசியை போக்கும் அம்மா உணவகம்...

ஒசூர் நகரில் பேருந்துநிலையம் உள்பட இரண்டு இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகம் நாள்தோறும் 5 ஆயிரம் பேரின் பசியை போக்கி வருகிறது.

198 views

144 தடை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 475 வழக்குகள் 727 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி ஊர்சுற்றி திரிவதாக கூறி 727 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 views

பரபரப்பாக 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை -தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகள்

கொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில் சென்னையில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான் அத்தனை பணிகளும் முடுக்கி விடப்படுகிது.

392 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.