கொரோனா முன்னெச்சரிக்கை : மார்ச் 31 ஆம் தேதி வரை ரெங்கநாதன் தெரு கடைகள் மூடல்
பதிவு : மார்ச் 18, 2020, 04:53 PM
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31 ஆம் தேதி வரை சென்னை, தி.நகர், ரெங்கநாதன் தெருவில் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகம், திரையரங்கம் உள்ளிட்டவற்றை மூடுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, தி.நகர், ரெங்கநாதன் தெருவில் அனைத்து வணிக நிறுவனங்களும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், சென்னை மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், எனினும், சிறிய நிறுவனங்களை மட்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்வும் ரெங்கநாதன் தெரு வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், ஜவுளி, மொபைல், மளிகை, தங்கம் என ஒரே நாளில் பல கோடி ரூபாய் வணிகம் நடைபெறும் ரெங்கநாதன் தெரு வெறிச்சோடி காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா - நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

238 views

பிற செய்திகள்

தூய்மை காவலர்களுக்கு பாத பூஜை : பரிசுப் பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவி

அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களை கவுரவிக்கும் வகையில் மன்ற தலைவி சந்திரா பாதபூஜை செய்தார்.

16 views

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி வழி மனநல ஆலோசனை

சென்னை மாநகரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

92 views

கட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு தண்டனை வழங்கிய போலீசார்

சென்னை குன்றத்தூரில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே திரிந்த வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் தண்டனை விதித்தனர்.

18 views

நாள்தோறும் 5000 பேரின் பசியை போக்கும் அம்மா உணவகம்...

ஒசூர் நகரில் பேருந்துநிலையம் உள்பட இரண்டு இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகம் நாள்தோறும் 5 ஆயிரம் பேரின் பசியை போக்கி வருகிறது.

172 views

144 தடை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 475 வழக்குகள் 727 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி ஊர்சுற்றி திரிவதாக கூறி 727 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 views

பரபரப்பாக 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை -தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகள்

கொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில் சென்னையில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான் அத்தனை பணிகளும் முடுக்கி விடப்படுகிது.

374 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.