"கொரோனா மருந்து : விரைவில் நல்ல செய்தி" - பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை
பதிவு : மார்ச் 18, 2020, 04:51 PM
கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மையா? என கேள்வி எழுப்பினார். கொரோனா மருந்து, பரிசோதனை ஆய்வகம் குறித்து தி.மு.க உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதியாக உரிய உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றார். கொடிய நோயான கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை என்றும், தமிழக மருத்துவர்கள் குழு அந்த ஆய்வில் தற்போது ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பல நடவடிக்கைகளின் விளைவாக, கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

63 views

பிற செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்.

15 views

தமிழகத்தில் 2,200 மெகாவாட் மின்சாரம் சேமிப்பு - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீடுகளில் விளக்குகள் அணைக்கப்பட்டதால் தமிழகத்தில் 2 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

21 views

"கொரோனா வைரஸ் பரவல் : ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்" - பிரதமர் மோடியிடம் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதில் சீரான நிலை ஏற்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

263 views

ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம் : "தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

130 views

பிரதமர் மோடி தலைமையில் 8-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு

பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடியை தொலைபேசயில் தொடர் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

89 views

தமிழகம் முழுவதும் விளக்கேற்றிய பொதுமக்கள்

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் ஒளி ஏற்றிவைத்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.