"கொரோனா வைரஸ் நீர்த்துளிகளில் பல மணி நேரம் வாழும்" - அமெரிக்காவின் தொற்று நோய் ஆராய்ச்சி மையம் தகவல்
பதிவு : மார்ச் 18, 2020, 03:36 PM
கொரோனா வைரஸ் காற்றில் சில மணி நேரமும், பொருட்களின் மேற்பரப்பில் பல நாள்களும் உயிர் வாழ முடியும் என அமெரிக்காவின், ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 என்று அழைக்கப்படும் நோவல் கொரோனா வைரஸ் பெரும்பரப்பு தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்த புதிய வகை வைரஸ் காற்றில் சில மணி நேரமும், பொருட்களின் மேற்பரப்பில் பல நாட்களும் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான மையம் ஆய்வு மேற்கொண்டது. சில பொருட்களின் மேற்பரப்பில் எவ்வளவு மணி நேரம் இந்த நோவல் கொரோனா வைரஸ் உயிர் வாழ முடியும் என்பதை ஆய்வு மேற்கொண்டனர். ஒருவர் தும்மும்போதும், இருமும் போதும் சிறு துளிகளால் வெளியேறும் வைரஸ் அருகிலுள்ள பிறருக்கு தொற்றுவதற்கு வாய்ப்புள்ளது தெரிய வந்தது. கிருமி நாசினி மருந்துகள் சுமார் 66 நிமிடங்கள் வரை போராடி, கொரோனா வைரசின் செயல்பாட்டை, பாதியாக தடுக்கும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் போன்ற மேற்பரப்புகளில் இந்த வைரஸ் மூன்று நாட்கள் வரை உயிர் வாழ முடியும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் மேற்பரப்பில் வைரஸ்களின் செயல்பாட்டை பாதியாக தடுக்க 6 மணி நேரம் 49 நிமிடங்கள் ஆனது என்றும், அட்டைப் பெட்டிகளில் 24 மணி நேரத்திற்கு மேல் இந்த வைரஸ் உயிர் வாழ முடியாது என்றும், ஆய்வில் தெரிய வந்துள்ளது. செம்பு பொருட்கள் மீதான மேற்பரப்புகளில் 4 மணி நேரம் வரையும் இந்த வைரஸ் உயிர் வாழ முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. துருப்பிடிக்காத ஸ்டீல் மேற்பரப்பில் வைரஸ்களின் செயல்பாட்டை பாதியாக தடுக்க 5 மணிநேரம் 35 நிமிடங்கள் ஆனதும் என்றும், அட்டைப் பெட்டிகளின் மேற்பரப்பில் உள்ள வைரஸ்களின் செயல்பாட்டை பாதியாக தடுக்க மூன்றரை மணி நேரம் ஆனது என்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். செம்பு மேற்பரப்பில் வைரஸ்களின் செயல்பாட்டை பாதியாக தடுக்க 46 நிமிடங்கள் ஆனது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளன. மருத்துவத்தில், பல நவீன தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ள, மனித குலத்திற்கு கொரோனா வைரஸ் ஒரு சவால் என்றால் அது மிகையில்லை. 

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

45 views

பிற செய்திகள்

ரோமா​னியா நாட்டில் சிக்கி தவிக்கும் 120 இந்தியர்கள் - உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரோமா​னியா நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 120 பேரை மீட்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

38 views

அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவம் : ஒரே நாளில் 884 உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 884 பேர் உயிரிழந்துள்ளனர்.

232 views

கொரோனா தொற்று உள்ளதா? - கண்டறிய நாய்களுக்கு பயிற்சி...

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய, துப்பறியும் நாய்களுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

16 views

"ஹெச்.ஒன்.பி விசாவை வழங்குவதை நிறுத்த வேண்டும்"- அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வேண்டுகோள்

அமெரிக்காவில் ஹெச் ஒன் பி விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என, அதிபர் டிரம்புக்கு கோரிக்கை வந்துள்ளது.

16 views

ரஷிய அதிபர் புதினுக்கு கொரோனா பாதிப்பா?: கை குலுக்கிய மருத்துவருக்கு கொரோனா தொற்று

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைக்கு, அதிபர் புதின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

35 views

கொரோனா உயிரிழப்பு 9000 - ஐ கடந்தது - ஒரே நாளில் 884 உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.