தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனை- சொந்த செலவில் புதுப்பித்த மருத்துவர், செவிலியர்கள்
பதிவு : மார்ச் 18, 2020, 01:54 PM
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனையை சொந்த செலவில் புதுப்பித்த மருத்துவர் செவிலியர்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடியில், அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு பணிபுரியும் மருத்துவர் முத்துக்குமார் மற்றும் செவிலியர்கள் வசந்தா, கீதா ஆகியோர், தங்களது சொந்த செலவில், மருத்துவமனை கட்டிடங்களின் சுவர்கள் அனைத்திலும் திருக்குறளை எழுதி தனியார் மருத்துவமனைக்கு நிகராக மாற்றியுள்ளனர். 

மருத்துவமனை வளாகத்தினுள் நூலகம் ஒன்றையும் திறந்து வைத்த அவர்கள், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில், தற்போது தினமும் புறநோயாளிகள் 800 முதல் 1000 பேர் வரை வருகின்றனர். எந்த வித நோய்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்படுவதாக தெரிவித்துள்ள மக்கள், மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 

பிற செய்திகள்

"மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம்" - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

24 views

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

15 views

"இந்தியர்கள் நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன?" : மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கினால், மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள், நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒரு வாரத்தில் விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

50 views

அரிசி உள்ளிட்ட மளிகை பொருள் - 120 குடும்பங்களுக்கு போலீசார் வழங்கினர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் போலீசாரால் வழங்கப்பட்டது.

52 views

"சென்னையில் கொரோனா பதற்றப் பகுதி இல்லை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கொரோனாவால், பதற்றமான பகுதி ஏதும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

415 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.