நூதன முறையில் திருடி சென்ற வெளிநாட்டு தம்பதி - சிசிடிவி பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை
பதிவு : மார்ச் 18, 2020, 09:59 AM
தஞ்சை கொடிமரத்து மூலை பகுதியில் ரூபாய்நோட்டு மதிப்புகேட்பது போன்று நடித்து, உதிரிபாக கடை உரிமையாளரிடம் 11 ஆயிரம் ரூபாய் பணத்தை வெளிநாட்டு தம்பதியினர் திருடிசென்றனர்.
தஞ்சை கொடிமரத்து மூலை பகுதியில் ரூபாய்நோட்டு மதிப்புகேட்பது போன்று நடித்து, உதிரிபாக கடை உரிமையாளரிடம் 11 ஆயிரம் ரூபாய் பணத்தை வெளிநாட்டு தம்பதியினர் திருடிசென்றனர். முன்னதாக கொரோனா அச்சத்தால், வெளிநாட்டினரின் பணத்தை பெற மறுத்து, தன்னிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை உரிமையாளர் பார்த்தசாரதி காண்பித்துள்ளார். அப்போது, அந்த நபர் 11 ஆயிரம் ரூபாய் பணத்தை லாவகமாக பர்சுக்குள் மறைத்து திருடிசென்றார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி பதிவு அடிப்படையில் இருவரையும் தேடி வருகின்றனர்.

பிற செய்திகள்

தட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு

மாதச் சம்பளம் பெறாத கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

10 views

மது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி

மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

24 views

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

38 views

தனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்

தனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

19 views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

122 views

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

332 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.