13 வயதான மகனை கொடூரமாக கொன்ற தாய் - நாய் கட்டும் செயினால் கழுத்தை இறுக்கி கொலை
பதிவு : மார்ச் 17, 2020, 04:13 PM
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தன் 13 வயது மகனை கொடூரமாக கொன்ற தாய், தன் மகள் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியின் உச்சம்.
கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை மலையடி பகுதியை சேர்ந்தவர் வசந்தா. கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த இவர், 13 வயதான மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு தன் மகன் லால் கிருஷ்ணன், தெரியாமல் தூக்க மாத்திரையை சாப்பிட்டு விட்டு மயங்கி விட்டதாக கூறி அழுதுபுரண்டார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் வசந்தாவின் கண்ணீரை பார்த்து கலங்கியதோடு சிறுவனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலை வழக்காக சிறுவனின் மரணம் பதிவு செய்யப்பட்ட நிலையில் வசந்தாவை பிரிந்து சென்ற கணவருக்கு இது உறுத்தலாகவே இருந்தது. தன் மகனின் மரணத்தின் பின்னால் மர்மம் இருப்பதாக கூறிய அவர், மாவட்ட எஸ்.பி., முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்தார். அதேநேரம் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவிலும் பல குழப்பங்கள் இருந்த போதிலும் இந்த வழக்கை போலீசார் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் தான் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் 18 வயதான தன் மகளுக்கு 35 வயதான சுபணன் என்பவரை திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் சந்தேகம் வலுக்கவே அனைவரின் கவனமும் வசந்தாவின் மீது திரும்பியது. வசந்தாவின் கணவர் மீண்டும் புகாரை தூசி தட்டி எடுக்கவே, விசாரணையில் இறங்கினர் போலீசார். அப்போது தான் திடுக்கிடும் தகவல் வெளியானது. கணவரை பிரிந்து வாழ்ந்த வசந்தாவுக்கு சுபணனுடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது. இருவரும் தனிமையில் இருப்பதை மகன் லால்கிருஷ்ணன் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்தா, தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகனின் கழுத்தை நாய் கட்டும் செயினால் இறுக்கியுள்ளார். இதில் மகன் மயங்கி விழுந்ததும் தூக்க மாத்திரைகளை வாயில் போட்டு தற்கொலை போல நாடகமாடியுள்ளார். கழுத்தை இறுக்கி மகனை கொன்றது பிரேத பரிசோதனை முடிவில் இருந்த போதிலும் போலீசார் அதை போலீசார் கண்டுகொள்ளவே இல்லை. இதனிடையே மகளுக்கு தன் கள்ளக்காதலனை திருமணம் செய்து வைத்தால் எந்த வித பயமும் இன்றி வாழலாம் என தப்புக் கணக்கு போட்ட வசந்தா, தன் முடிவால் இன்று போலீசாரிடம் வலுவாக சிக்கியிருக்கிறார். கடந்த 12 ஆம் தேதி வசந்தா, சுபணன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலமே நடந்த சம்பவங்கள் அனைத்தும் வெளியே தெரிந்திருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை சம்பவத்தில் துப்பு துலங்கியிருந்தாலும், மகனை கொன்ற தாய், தன் மகளின் வாழ்க்கையையும்  கேள்விக்குறியாக்கி இருப்பது வேதனை தரும் சம்பவம்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

707 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

356 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

88 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

51 views

பிற செய்திகள்

இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் புதிய கருவி - சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தயாரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் அவர்களை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் கருவியை சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

123 views

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய கல்குவாரிகள், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, நாமக்கல் மாவட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.

10 views

போக்குவரத்து காவலர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்...

சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி என்பவர் பணியின்போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

8 views

100 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய இளைஞர்கள், ஊர் மக்களின் மனிதநேயம்...

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் 100-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து 500-ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

13 views

ஈரோடு : தூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

ராணிப்பேட்டை : கொரோனா தொற்று இல்லை என உறுதியானதால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 பேர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய 17 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது.

101 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.