தங்கம், வெள்ளி விலை தொடர் வீழ்ச்சி : தங்கம் விலை ஒரு வாரத்தில் ரூ.2,500 வரை சரிந்தது
பதிவு : மார்ச் 17, 2020, 03:54 PM
தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை கடந்த 10 நாட்களில் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதுடன், வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைய தொடங்கியதில் இருந்து தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. நாடுகளிடையே ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் முடங்கியதால்,  பங்குச் சந்தைகளில் பெரும் இழப்பு ஏற்பட்டது. பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறிய முதலீட்டாளர்கள், அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்ததால், ஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றத்தை கண்டது. கடந்த 7 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 33 ஆயிரத்து 656 ரூபாயாக விற்பனையானது. அதன்பின்னர் 10 ஆம் தேதி 33 ஆயிரத்து 712 ரூபாயாக ஏற்றம் கண்ட நிலையில், 13 ஆம் தேதி 32 ஆயிரத்து 160 ரூபாயாக சரிந்தது. 16 ஆம் தேதி 31 ஆயிரத்து 544 ரூபாயாக குறைந்த நிலையில், 17 ஆம்  தேதி காலை, 30 ஆயிரத்து 960 ரூபாயாக குறைந்தது. கடந்த வாரத்தில் இருந்து தற்போது வரை தங்கம் விலை சவரனுக்கு சுமார் 2 ஆயிரத்து 500 ரூபாய் விலை குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கடந்த ஒரு வாரத்தில்  கிலோவுக்கு 11 ஆயிரம் ரூபாய் வரை வீழ்ச்சியை கண்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி 50 ஆயிரத்து 300 ஆக இருந்த ஒரு கிலோ வெள்ளி, 12 ஆம் தேதி 48 ஆயிரத்து 900 ரூபாயாக சரிந்தது. 13 ஆம் தேதி இந்த வீழ்ச்சி 45 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்தது. 15 ஆம் தேதி 44 ஆயிரமாக குறைந்தது. 16 ஆம் தேதி மீண்டும், செங்குத்தான வீழ்ச்சி போல, 40 ஆயிரத்து 800 ரூபாய்க்கு குறைந்ததுடன், 17 ஆம் தேதி  39 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது. இந்த வீழ்ச்சி காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

708 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

356 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

88 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

51 views

பிற செய்திகள்

கர்நாடகா : ரூபாய் நோட்டுக்களை சோப்பு நீரால் கழுவிய விவசாயி

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

82 views

லூதியானா பகுதியில் வெளியாட்கள் யாரும் நுழைய தடை

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் பல கிராம மக்கள், தங்கள் கிராமத்திற்குள் யாரும் நுழைய முடியாத படி, கயிறு கட்டி தடுத்துள்ளனர்.

7 views

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கொரோனா நோயாளிகள் - வயநாடு மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு

கொரோனா பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

5 views

"நாடு முழுவதும் 5,194 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்

நாடு முழுவதும் 5 ஆயிரத்து194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், உயிரிழப்பு 149ஆக உயர்ந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தெரிவித்துள்ளார்.

6 views

ஆந்திரா : போலீசாருடன் சாலையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர்

ஆந்திர மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் வெங்கட்ராமையா சாலையோரத்தில் போலீசாருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

101 views

காஷ்மீரில் ஜெய்ஸ் இ முகமது இயக்க தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தளபதியாக செயல்பட்ட சாஜத் தாரை துணை ராணுவப்படையினர் சுட்டுக் கொன்றனர்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.