கங்கா ஃபவுண்டேஷன்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை -பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நோட்டீஸ்
பதிவு : பிப்ரவரி 15, 2020, 04:00 AM
சசிகலா பினாமி என கூறி, தங்கள் நிறுவனத்திற்கு எதிராக பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி கங்கா ஃபவுண்டேஷன்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சசிகலா வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், கங்கா ஃபவுண்டேஷன்ஸ் நிறுவனத்திலும், சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனத்திற்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து அந்நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஸ்பெக்ட்ரம் மால் கட்டிடத்தை விற்பனை செய்யும்படி,  சிலர் நிர்ப்பந்தித்ததால்,192 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்து, 130 கோடி ரூபாய் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். தங்கள் தரப்பு கருத்தைக் கேட்காமல் வருமான வரித் துறை, பினாமி சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், தங்கள் நிறுவனத்தை பினாமி நிறுவனம் என தீர்மானித்தது தவறு எனவும் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு மார்ச் 6 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5388 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2382 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

348 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

286 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

16 views

பிற செய்திகள்

"தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

3 views

தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

54 views

"சம்பிரதாயத்துக்காக சட்டமன்றம் கூட்டப்பட்டது" - தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு

புதுக்கோட்டையில் நடந்த திமுகவின் எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சியில் பலர் தங்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.

7 views

கொள்ளிடம் புதிய கதவணை கட்டுமான பணிகள் 55% நிறைவு - பொதுப்பணித்துறை தகவல்

கொள்ளிடம் ஆற்றில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

198 views

நீட் எதிர்ப்பு... 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது

நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் 7வது நாளாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

129 views

விருத்தாச்சலம்: மருத்துவமனையில் எலித்தொல்லை - தாய்மார்கள் அவதி

விருத்தாச்சலம் அரசு பொது மருத்துவமனையில் எலிகள் தொல்லையால் தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.