டிராபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்ட் - தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : பிப்ரவரி 15, 2020, 03:55 AM
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவாரண பொருள்களை அ.தி.மு.க.வினர் பறிப்பதாக குற்றம்சாட்டிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து  பேசிய வீடியோ பதிவு  வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக டிராபிக் ராமசாமிக்கு எதிராக  சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த  2016 ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதி செல்வக்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராபிக் ராமசாமிக்கு எதிராக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் காலாவதியாகி விட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  புதிதாக வாரண்ட் பிறப்பித்து நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார். 


தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

192 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

30 views

பிற செய்திகள்

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் வேலைப் பளுவை குறைக்க ரோபோ - சென்னை இளைஞரின் கண்டுபிடிப்பு

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலைப் பளுவை குறைக்க ரோபோ ஒன்றை வடிவமைத்து இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர்.

40 views

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

123 views

சாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டு

உசிலம்பட்டியில் கீழே கிடந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

16 views

ரூ.250க்கு 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு

வடசென்னை மக்களுக்காக வெங்காயம், தக்காளி, 2 தேங்காய், இஞ்சி, எலுமிச்சம் பழம் உட்பட 15 பொருட்கள் கொண்ட குறைந்த விலை காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

15 views

நியாய விலைகடைகளில் இலவச தொகுப்புகள் : பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரம்

மதுரை அவனியபுரம் பகுதியில் ஏப்ரல் 2 முதல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான பொருள்கள் தற்போது லாரிகள் மூலம் கடைகளுக்கு இறக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

11 views

காய்கறி மார்க்கெட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

கோவையில் தற்காலிகமாக இயங்கி வந்த அண்ணா மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என கூறி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.