குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம்
பதிவு : பிப்ரவரி 15, 2020, 03:23 AM
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
கோவை, பொள்ளாச்சியிலும் இஸ்லாமியர்கள் மறியல்கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கூடிய இஸ்லாமிய அமைப்பினர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். செல்போன் டார்ச் அடித்தும் போலீசாரின் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் பொள்ளாச்சியிலும் இஸ்லாமியர்கள் மறியலில் ஈடுபட்டனர். காந்திசிலை முன்பு  கூடிய 500-க்கும்மேற்பட்டோர், போலீசாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

திருப்பூரில் போலீசாரின் தடியடியை கண்டித்து சாலை மறியல்போலீசாரின் தடியடியை கண்டித்து, திருப்பூரில் 500-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிடிசி கார்னரில் கூடிய அவர்கள், போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

இஸ்லாமிய அமைப்புகள் சாலை மறியல்தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தென்காசி - ராஜபாளையம் சாலையில் அமர்ந்து அவர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்

போலீசாரின் தடியடியை கண்டித்து சாலை மறியல்

மதுரையில் வில்லாபுரம் பகுதியில் விமானம் நிலையத்திற்கு செல்லும் சாலையில், 300க்கும் மேற்பட்டோர் இரவில், சாலைமறியலில்  ஈடுபட்டனர். பெண்கள் கை குழந்தைகளோடு மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.

திருச்சியில் இரண்டு இடங்களில் சாலை மறியல்காவல் துறையினர் தடியடியை கண்டித்து திருச்சியில் வெவ்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்டோன்மெண்ட் எம்.ஜி.ஆர் சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து, அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள், தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற காவல்துறை அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.

கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்சென்னையில் நடைபெற்ற போலீஸ் தடியடியை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் இஸ்லாமியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி, சிதம்பரம், லால்பேட்டை மற்றும் மங்கலம்பேட்டை பகுதிகளில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள்  மறியல்கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். அழகியமண்டபம் பகுதியில் சாலையோரம் ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமியர்கள், குளச்சல், நாகர்கோவில் இடலாக்குடி பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பிற செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

204 views

இரும்பு, உள்ளிட்ட 13 விதமான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு

இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 13 விதமான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

111 views

கொரோனா தடுப்பு - நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.

564 views

கொரோனாவால் கிராமிய இசை கலைஞர்கள் பாதிப்பு - மானியத் தொகையை அதிகரிக்க கோரிக்கை

திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூர்றுக்கணக்கான கிராமிய இசை கலைஞர்கள் உள்ள நிலையில், ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

57 views

ஹரியானா, பஞ்சாபிற்கு பருத்தி விதைகள் ரயில் மூலம் 468 டன் அனுப்பி வைக்கப்பட்டன

சேலத்திலிருந்து ரயில் மூலமாக ஹரியானா, பஞ்சாப் பகுதிக்கு 468 டன் அளவிலான பருத்தி விதைகள் விவசாய தேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

19 views

ஊரடங்கு உத்தரவை மீறிய 700 பேர் மீது வழக்குப்பதிவு : வாகனங்களால் நிரம்பி வழியும் காவல்நிலையங்கள்

வாடிப்பட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 700 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.