பெட்ரோல் பங்க் மேலாளர் படுகொலையில் பகீர் தகவல் : பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு வைத்த குறி...
பதிவு : பிப்ரவரி 14, 2020, 07:54 AM
விழுப்புரம் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை சம்பவத்தில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் கம்பன் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வந்த கடலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது , பிரபல ரவுடி அசார் மற்றும் அவரது கூட்டாளிகள் தான் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்த‌து. போலீசார் தங்களை நெருங்கிவிட்டதை அறிந்த அசார் மற்றும் அப்பு ஆகியோர் நீதிமன்றத்தில் சரண‌டைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்த போலீசார்,  அவர்கள் அளித்த தகவலின்படி, தாமோதரன், முத்துக்குமார், ரகு, ஆரோக்கியராஜ், சிரில் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரகாஷ் பணம் தர மறுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி அசார், பிரகாசுக்கு வைத்த குறியில், மேலாளர் சீனிவாசன் இறையாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

580 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

193 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

30 views

பிற செய்திகள்

கற்றாழையை உண்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்?

கற்றாழையை உண்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என திருப்பூரை சேர்ந்த ஜெயந்தி என்பவர் தெரிவித்துள்ளார்.

0 views

அண்ணாமலையார் மலையில் தீ விபத்து - அரிய வகை மூலிகை மரங்கள் தீயில் எரிந்து நாசம்

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

2 views

கழுத்தை அறுத்து உயிரை விட்ட இளைஞர் - மதுபானம் கிடைக்காத விரக்தியால் தற்கொலை

கழுத்தை அறுத்து உயிரை விட்ட இளைஞர் - மதுபானம் கிடைக்காத விரக்தியால் தற்கொலை

5 views

சென்னைக்குள் பயணிப்பவர்களுக்கான அனுமதி சீட்டு: மண்டல அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்- மாநகராட்சி ஆணையர் தகவல்

அவசர தேவைக்காக சென்னை மாநகரத்திற்குள்ளேயே பயணிக்க வேண்டிய நபர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்களிலேயே மண்டல அலுவலர்களிடம் அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

5 views

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்டது மேலப்பாளையம்

நெல்லையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேலப்பாளையத்தை தனிமைப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து உத்தரவிட்டுள்ளது.

41 views

"ரிசர்வ் வங்கி அறிவிப்பை செயல்படுத்த மறுக்கும் வங்கிகள்" - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு

மூன்று மாதங்களுக்கு தவணைத் தொகை வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், சில வங்கிகள் இதனை பின்பற்றாமல் உள்ளன என திமுக எம்.பி, கனிமொழி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.