"பணத்துக்காக 6 பெண்களை மணந்த சிறப்பு எஸ்.ஐ." : காவல் ஆணையர் அலுவலகத்தில் முதல் மனைவி பரபரப்பு புகார்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 07:44 AM
பணத்தை குறி வைத்து 5 பெண்களை திருமணம் செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியை சேர்ந்த  பொறியாளர் பானுரேகா, காவலராக இருந்த பிரபாகரன் என்பவரை பெற்றோர் 1994 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளார். ஆனால், மாற்று சமுதாயம் என்பதால் ஏற்பட்ட பிரச்சினையில், பானுரேகா பிரிந்துள்ளார். இதைத் தொடர்ந்து,1995-ல் சீனிவாசன் என்பவருடனும், 2000-த்தில் முருகானந்தம் என்பவருடனும் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுடன் வாழ்ந்ததில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பானுரேகாவை சட்டப்படி திருமணம் செய்தவன் தாம் என்று கூறி பிரகாரன் மிரட்டியதால் இருவரும் பானுரேகாவை பிரிந்து சென்றுள்ளனர். இதனிடையே, பெங்களூரில் குடியேறிய பானுரேகாவை சந்தித்த பிரபாகரன், தன்னுடன் வாழுமாறு அழைத்து வந்துள்ளார். ஆனால், பணம் கரைந்தவுடன் அடித்து துன்புறுத்தியதாக கூறும் பானுரேகா, புகாரளிக்க சென்றபோது, பிரபாகரன் மீது ஏற்கனவே 5 பெண்கள் புகாரளித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 6வதாக அவரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது பிரபாகரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

578 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

192 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

30 views

பிற செய்திகள்

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் வேலைப் பளுவை குறைக்க ரோபோ - சென்னை இளைஞரின் கண்டுபிடிப்பு

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலைப் பளுவை குறைக்க ரோபோ ஒன்றை வடிவமைத்து இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர்.

34 views

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

120 views

சாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டு

உசிலம்பட்டியில் கீழே கிடந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

16 views

ரூ.250க்கு 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு

வடசென்னை மக்களுக்காக வெங்காயம், தக்காளி, 2 தேங்காய், இஞ்சி, எலுமிச்சம் பழம் உட்பட 15 பொருட்கள் கொண்ட குறைந்த விலை காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

14 views

நியாய விலைகடைகளில் இலவச தொகுப்புகள் : பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரம்

மதுரை அவனியபுரம் பகுதியில் ஏப்ரல் 2 முதல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான பொருள்கள் தற்போது லாரிகள் மூலம் கடைகளுக்கு இறக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

10 views

காய்கறி மார்க்கெட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

கோவையில் தற்காலிகமாக இயங்கி வந்த அண்ணா மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என கூறி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.