அரசியல் கட்சியினர் மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் - உயர்நீதிமன்றம் அதிருப்தி
பதிவு : பிப்ரவரி 14, 2020, 07:38 AM
மாற்றம் : பிப்ரவரி 14, 2020, 08:09 AM
அரசியல் கட்சியினர் மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், சொத்து வரி வசூல் செய்ய விதிகளை வகுக்கும்படி மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என  வழக்கறிஞர் மேனன்  என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் , வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், அரசின் அவசர பணியாக டெல்லி செல்வதால் மாநகராட்சி ஆணையர்  நேரில் ஆஜராக முடியவில்லை என தெரிவித்தார். மாநகராட்சி ஆணையர் ஆஜராக கால அவகாசமும் கோரினார். இதையடுத்து சொத்துவரியை உயர்த்தாமல் அரசு தூங்கி கொண்டிருப்பதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டுகளில்  4 முறை சொத்து வரியை உயர்த்தி இருக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். மேயர் பதவியை பிடிப்பது என்பதில் மட்டுமே அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுவதாக கூறிய நீதிபதிகள் , சொத்துவரி உயர்த்தாதது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

128 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

11 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : இஸ்லாமிய அமைப்புகள் கண்டன பொதுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

7 views

பிற செய்திகள்

தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி : தமிழக போலீஸ் அதிகாரி 3 தங்கம் வென்று அசத்தல்

தேசிய அளவிளான மூத்தோர் தடகள போட்டியில் பொள்ளாச்சியை சேர்ந்த போலீஸ் அதிகாரி 3 தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

2 views

சொகுசு பேருந்து, கண்டெய்னர் லாரி மோதல் : 20 பேர் உயிரிழந்த பரிதாபம்- 4 பேர் கவலைக்கிடம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சொகுசு பேருந்தும் கன்டெய்னர் லாரியும் மோதிக்கோண்ட கோர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

75 views

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் : அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிய குருவிகள்

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதனை கடத்தி வந்த குருவிகள், அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

33 views

ஈவிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட்டது முதல்.. படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டது வரை பல விபத்துகள்...

ஈவிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட்டது முதல் அது படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டது வரை அங்கு பல விபத்துகள் நடந்த வண்ணமாய் உள்ளன.

105 views

சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு - உத்தரவு

சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, 30 நாட்களில் தனது அறிக்கையை, அரசுக்கு அளிக்க வேண்டுமென,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

சுற்றுலா பேருந்து, ஆம்னி பேருந்து மோதிய கோர விபத்து : 5 பேர் உயிரிழப்பு - 25 பேர் காயம்

சுற்றுலா வந்த நேபாள பேருந்து மீது பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதியதில், நேபாளத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.