உணவகத்தில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ ஓட்டுநர் - கொலையா, கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தா என விசாரணை
பதிவு : பிப்ரவரி 14, 2020, 12:57 AM
சென்னை கோட்டூர்புரத்தில் ஆட்டோ ஓட்டுனர் தீப்பிடித்து எரிந்த சம்பவம், காதல் விவகாரத்தால் நடந்த கொலையா, என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை ராமாபுரத்தில் வசித்த அரியலூர் மாவட்டம் மணக்கால் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான மணிகண்டன் என்கிற தமிழ்குடிமகன், நேற்று கோட்டூர்புரத்தில் உள்ள, ஊர்க்காரரான முருகேசனின் உணவகத்துக்கு சென்றுள்ளார். அப்போது, மணிகண்டன் மீது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அவரை மீட்ட பொதுமக்கள்,108 ஆம்புலன்ஸில் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் நடத்திய விசாரணையில், சிகரெட் புகைத்தபடி பெட்ரோல் ஊற்றும்போது தீப்பிடித்ததாகவும்,  ஒட்டலுக்குள் இருந்த மணிகண்டன் மீது தீப்பிடித்ததாகவும் இருவேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனிடையே, ஓட்டல் உரிமையாளரின் மனைவியுடன், திருமணத்துக்கு முன்பே மணிகண்டனுக்கு காதல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பெட்ரோல் ஊற்றிய கையுடன் சிகரெட் பற்றவைக்கும் போது தீப்பிடித்தாக, மணிகண்டன் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனினும் இந்த சம்பவம்  குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

220 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

43 views

பிற செய்திகள்

ரேஷன் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளியில் நாற்காலிகள்: நாற்காலிகளில் அமர்ந்து சமூக விலகலை பின்பற்றிய மக்கள்

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் , கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

14 views

ஊரடங்கில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? - வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

ஊரடங்கு நேரத்தில் என்ன செய்யலாம்? என்னவெல்லாம் செய்யக் கூடாது என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அறிவுறுத்தும் வகையில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

36 views

வைரஸ் தொற்றை அழிக்கும் ரோபோக்கள் தயாரிப்பு: அரசின் அனுமதியை எதிர்பார்க்கும் தொழில் முனைவோர்

புற ஊதா கதிர்களைப் பயன்படுத்தி வைரஸ் தொற்றை அழிக்கும் ரோபோக்களைத் தயாரிப்பதற்கு அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருப்பதாக கோவையைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர்கள் தெரிவித்துள்ளனர்.

28 views

துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் , காந்திபுரம் வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

10 views

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - இலவசமாக கபசுர குடிநீர் வினியோகம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் கபசுர குடிநீர் இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

25 views

டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களை தங்கவைக்க எதிர்ப்பு: சமுதாய நலக்கூடம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில், டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களை தங்கவைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

772 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.