இயக்குநர் விஜய், கவுதம் மேனனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் : ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 01:11 PM
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் தலைவி படத்திற்கு தடைவிதிக்க கோரி தீபா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க இயக்குனர் விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி என்ற படத்தை இயக்குநர் விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கும், இயக்குநர் கவுதம் மேனனின் குயின் என்ற இணையதள தொடருக்கும் தடை விதிக்க கோரி ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி, தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக இயக்குனர் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் 2 வாரத்திற்குள் பதிலளிக்க  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

68 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

6 views

பிற செய்திகள்

முருகனின் சிறை அறையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கு : மார்ச் 2ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை அடுத்த மாதம் 2 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

6 views

உயர்நிலைப்பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் - தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் காரசார விவாதம்

உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்கள் வழங்கும் பங்கீட்டு தொகையை அரசே வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

5 views

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் : "தடியடி நடத்த காவல்துறைக்கு தூண்டுதல்" - ஸ்டாலின்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என சட்டப் பேரவையில் வலியுறுத்தினார்.

10 views

"குடியுரிமை திருத்த சட்டம் - எதிர்ப்பு போராட்டம் தொடரும்" - மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உறுதி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

7 views

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

460 views

உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் : "முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் என உறுதியளித்தார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.