புதிய தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் எத்தகைய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார்?
பதிவு : பிப்ரவரி 12, 2020, 05:10 PM
மத்திய பட்ஜெட் தயாரிப்பில் பலமுறை பங்கேற்ற அனுபவமும், சமூக மேம்பாட்டில் அவருக்கு உள்ள அக்கறையும் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் எத்தகைய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே அதிகரித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம், தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து,  மூத்த ஐ ஏ எஸ் அதிகாரியான கிருஷ்ணன் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். 2020 - 21 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து கிருஷ்ணன் தயாரித்துள்ளார். டெல்லியில் இளங்கலை படிப்பையும்,  அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை படிப்பையும் முடித்திருக்கிறார் கிருஷ்ணன். 25 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வரும் கிருஷ்ணன், மாநில மற்றும் மத்திய அரசுகளின் பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றி அனுபவம் உள்ளவர். சர்வதேச நிதி கட்டமைப்பு மற்றும் உலகளாவிய நிதி பாதுகாப்புக்கான வழிமுறை தொடர்பான பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர் கிருஷ்ணன். மத்திய அரசுப் பணியில் இருந்த போது பலமுறை மத்திய பட்ஜெட் தயாரிப்பதில், தனது பங்கை அதிகளவில் அளித்துள்ளார். பொது நிதி மற்றும் சமூக மேம்பாட்டு பிரச்னைகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிப்பவரான நிலையி​ல், அது சார்ந்த திட்டங்கள் அதிகளவில் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

பிற செய்திகள்

"பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா?" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர்.

19 views

அதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை

அதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது.

5556 views

மதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்?

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

575 views

"பாதுகாப்பான முறையில் மீன் விற்க நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னையில் பாதுகாப்பான முறையில் மீன் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

84 views

நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ் தகவல்

கடந்த ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை ரேஷனில் அத்தியாவசிய பொருட்களை அதற்கான விலை கொடுத்து வாங்கிய குடும்ப அட்டைதாரர்கள் இம்மாதத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை பெற்று கொள்ளலாம் என உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

279 views

ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் மின்சார பயன்பாடு உயர்ந்துள்ளது - அமைச்சர் தங்கமணி

ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் மின்சார பயன்பாடு உயர்ந்துள்ளது என அமைச்சர் தங்கமணி விளக்கம்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.