"ஜூன் 30க்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல்" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 04:14 PM
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை வருகிற ஜூன் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தக் கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர், நடிகர் விஷால், அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி,  ஜூன் 30ஆம் தேதிக்குள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன், தேர்தலை  நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரையும் நீதிபதி நியமனம் செய்தார். இந்த உத்தரவை தொடர்ந்து, தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து, தொடர்ந்த வழக்கை நடிகர் விஷால் தரப்பு வாபஸ் பெற்றது.   

பிற செய்திகள்

அஜீத்தின் மைத்துனர் நடிக்கும் திரௌபதி : புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு

நடிகர் அஜீத்தின் மைத்துனரான ரிஷி ரிச்சர்ட் நடித்துள்ள 'திரௌபதி ' திரைப்படம் வரும் 27 ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

156 views

இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகை ரம்யா நம்பீசன் : பெண்கள் சந்திக்கும் துன்பம் குறித்து குறும்படம்

பெண்கள் சந்திக்கும் துன்பங்களை வெளிப்படுத்தும் குறும்படத்தை நடிகை ரம்யா நம்பீசன் இயக்கி, வெளியிட்டுள்ளார்.

7 views

சகாக்களை இழந்து நிற்கிறேன் - கமல்

எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் தற்போதைய விபத்து மிகக் கொடூரமானது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

272 views

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து : நடிகர் கமல் - இயக்குனர் சங்கர் நேரில் ஆறுதல்

சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சாய்ந்து, படுகாயம் அடைந்தவர்களை, நடிகர் கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

596 views

கமல் படப்பிடிப்பு தளத்தில் விபத்து : கிரேன் சாய்ந்து விழுந்து 3 பேர் பலி 9 பேர் படுகாயம் - போலீசார் விசாரணை

சென்னை பூந்தமல்லி அருகே கமலின் படப்பிடிப்பு தளத்தில், கிரேன் சாய்ந்து விழுந்து, 3 பேர் உயிரிழந்தனர்.

1025 views

"கர்ணன்" படப்பிடிப்பிற்கு தடை கோரி, டி.ஐ.ஜி-யிடம் மனு : முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் வழங்கினர்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தின், படப்பிடிப்பிற்கு தடை விதிக்க கோரி, நெல்லை சரக டி.ஐ.ஜி-யிடம், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் புகார் அளித்தனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.