ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு
பதிவு : பிப்ரவரி 11, 2020, 03:08 AM
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரேனா வைரஸ் பரவி வருவதால் , அந்த கப்பலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தங்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
டயமண்ட் பிரின்சஸ் என்ற பிரமாண்ட  சொகுசு கப்பல் பல நாடுகள் வழியாக  ஜப்பானின் யோஹோகாமா துறைமுகத்திற்கு சென்றது. கடந்த ஒரு வாரமாக அங்கேயே நிற்கும் அந்த கப்பலில் 3 ஆயிரத்து 711 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 135 பேருக்கு கொரேனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பயணிகள் பலருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் மேலும் 65 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கப்பலில் உள்ள அனைத்து பயணிகளும் தங்கள் அறைகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவை அறைகளுக்கே அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே அவர்கள் அறையை விட்டு  வெளியே வர அனுமதிக்கப்பட்டுவதாக கூறப்படுகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் ,அனைத்து பயணிகளுக்கும்  பரிசோதனை நடத்த உள்ளதாகவும் முடிவு செய்துள்ளதாக  ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சர் கட்சுநோபு கட்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் சொகுசு கப்பலில் இந்தியாவை சேர்ந்த  135 பயணிகள் உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த அன்பழகன் உள்ளிட்டவர்கள் தற்போது அந்த கப்பலில் உள்ளனர். தங்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து செல்ல மத்திய -மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3819 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1014 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

59 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

46 views

பிற செய்திகள்

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பல் - கப்பல் பயணிகள் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் புதிதாக 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 views

டெல்லியில் மணீஷ் சிசோடியா உட்பட 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

கெஜ்ரிவாலை தொடர்ந்து துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதவியேற்றுக் கொண்டார்.

21 views

டெல்லி முதல்வராக 3வது முறையாக கெஜ்ரிவால் பதவியேற்பு - ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட விழா

டெல்லி முதலமைச்சராக மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார்.

16 views

"காலில் விழ வேண்டாம்" - மாற்றுத்திறனாளி பெண்ணை தடுத்த பிரதமர் மோடி

உத்தபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.

59 views

ஜாமியா பல்கலை நூலகத்தில் போலீஸ் தாக்குதல் - சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ

டெல்லி ஜாமியா பல்கலை நூலகத்தில் போலீசார் மாணவர்களை தாக்கிய காட்டிச்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

188 views

டெல்லி காவல்துறையின் 73-வது எழுச்சி தினம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

நாட்டின் பாதுகாப்பு பணியில் 35 ஆயிரம் காவலர்கள் இன்னுயிரை நீத்துள்ளதை நினைவு கூறும் வகையில் டெல்லியில் தேசிய காவல்துறை நினைவகம் கட்டப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.